1984 டிசம்பர் 3:அமெரிக்க நிறுவனமான யூனியன் கார்பைடின் கிளை நிறுவனமாக போபாலில் செயல்பட்ட யூனியன் கார்பைடு இந்தியா லிமிடேடின் பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலையிலிருந்து விஷவாயுவான மீத்தேன் ஐஸோசயனைட் கசிந்து பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்தனர்.
1984 டிசம்பர் 4:யூனியன் கார்பைடு தலைவர் வாரன் ஆண்டர்சன் உள்ளிட்ட 9 பேர் கைது. ஆனால் 2000 டாலர் ஜாமீனிலும், அழைத்தால் வரவேண்டும் என்ற எளிதான நிபந்தனையின் அடிப்படையிலும் மத்திய பிரதேச போலீஸ் விடுதலைச் செய்தது.
1984 டிசம்பர் 4:வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது.
1985 பிப்ரவரி:யூனியன் கார்பைடிடமிருந்து 3.3 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு கோரி இந்திய அரசு அமெரிக்க நீதிமன்றத்தில் மனு அளித்தது.
1986:அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் இதுத்தொடர்பான வழக்குகள் அனைத்தையும் இந்தியாவுக்கு மாற்றுவதாக உத்தரவிட்டது.
1987டிசம்பர்:சி.பி.ஐ குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்தது. இந்திய தண்டனைச்சட்டம் 306, 326 பிரிவுகளின் படி நீதிமன்றம் யூனியன் கார்பைடு நிறுவனம் அமெரிக்கா, யூனியன் கார்பைடு நிறுவனம் ஹாங்காங், யு.சி.ஐ.எல் ஆகியவற்றிற்கெதிராக குற்றஞ்சாட்டியது. வாரன் ஆண்டர்ஸனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
1989 பிப்ரவரி:மத்திய அரசுக்கும்,யூனியன் கார்பைடு நிறுவனத்திற்குமிடையே 47 கோடி டாலருக்கு சமாதான உடன்படிக்கை ஃபார்முலா முன்வைக்கப்பட்டது.
1989 பிப்ரவரி:அநீதமான இந்த சமாதான உடன்படிக்கைக்கு எதிராக ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
1992:47 கோடி டாலரின் ஒரு பகுதி போபால் விஷவாயுவ் துயரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. பலமறை கோரியும் கோர்ட்டில் ஆஜராகதால் வாரன் ஆண்டர்ஸனை நீதிமன்றம் தலைமறைவுக் குற்றவாளியாக அறிவித்தது.
1996 செப்டம்பர் 13:குற்றவாளிகளின் மனுவை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட் வழக்கை சாதாரண பிரிவுகளுக்கு மாற்றியது.(304, எ.336, 337).
1999 ஆகஸ்ட்:யூனியன் கார்பைடு நிறுவனம் அமெரிக்க கம்பெனியான டோ கெமிக்கல்ஸுடன் இணைந்தது.
1999 நவம்பர்:போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களும் சில அமைப்புகளும் ஆண்டர்சனுக்கெதிராக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கை பதிவுச் செய்தனர்.
2001 பிப்ரவரி:யு.சி.ஐ.எல்லின் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள இயலாது என யூனியன் கார்பைடு அறிவிப்பு.
2002ஆகஸ்ட்:ஆண்டர்ஸனுக்கெதிராக இனப்படுகொலை குற்றஞ் சுமத்தப்பட்டது. இவரை இந்தியாவுக்கு ஒப்படைக்க வேண்டுமென்று இந்தியா வலியுறுத்தியது.ஆனால் ஆண்டர்சன் அமெரிக்காவில் இல்லை என அமெரிக்கா தெரிவித்தது. அவர் அமெரிக்காவில் தான் உள்ளார் என பிரிட்டீஷ் நாளிதழ் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது.
2002 அக்டோபர்:ஆயிரக்கணக்கான டன் விஷம் அசுத்தமாக கெட்டிக் கிடக்கும் யூனியன் கார்பைடு தொழிற்சாலையை சுத்தப்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு.
2003 மே:ஆண்டர்ஸனை ஒப்படைக்க வேண்டுமென்று இந்தியா அதிகாரப்பூர்வமாக கேட்டுக்கொண்டது.
2004 மார்ச்:இந்தியா அனுமதி ஆவணம் வழங்கினால் விஷ அசுத்ததை சுத்தப்படுத்த டோ கெமிக்கல்ஸிடம் கோரப்படும் என அமெரிக்க நீதிமன்றம் அறிவித்தது. இந்தியா அனுமதி ஆவணத்தை அளித்தது.
2004 ஜூன்:குற்றவாளிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில் ஆண்டர்ஸன் உட்படாததால் அவரை (ஆண்டர்ஸனை) ஒப்படைக்க முடியாது என அமெரிக்கா அறிவித்தது.
2004 ஜூலை 19:நஷ்ட ஈடான 47 கோடி டாலர் மற்றும் வட்டி உட்பட 15 பில்லியன் டாலர் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவேண்டுமென சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
2010 ஜூன்:ஏழு பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு.
source:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "துயரம் மற்றும் புறக்கணிப்பின் 26 ஆண்டுகள்"
கருத்துரையிடுக