
கடந்த வெள்ளிக்கிழமை (25.06.2010) கப்பலுக்கான இணைப்பாளர் ஷெய்க் ஹுஸாம் அல் ஃகாலி இதுபற்றிக் தெரிவிக்கையில், தாம் அனுப்பவிருக்கும் நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பலில் லெபனான் மார்க்க அறிஞர்கள் 15 பேரும் செல்லவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
லெபனான் சார்பில் துயர்துடைப்புக் குழுவில் இடம்பெறுவோர் வான்வழியே கிரீஸ் சென்று அங்குள்ள துறைமுகத்திலிருந்தே கப்பலைச் சென்றடைவார்கள் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இஸ்ரேலிய அச்சுறுத்தல்கள் துயர்துடைப்புக் குழுவில் பங்கேற்போரை எந்த வகையிலும் பின்வாங்கச் செய்யப்போவதில்லை என்றும், காஸ்ஸா மீதான முற்றுகையை முறியடிப்பதில் அவர்கள் மிகுந்த உறுதியோடு இருப்பதாகவும் ஷெய்க் ஹுஸாம் அல் ஃகாலி வலியுறுத்தினார்.
0 கருத்துகள்: on "ஃப்ரீடம் ஃபுளோடில்லா-2 உடன் இணையவுள்ள லெபனான் நிவாரணக் கப்பல்"
கருத்துரையிடுக