கொல்கத்தாவில் 5000 துப்பாக்கித் தோட்டக்களை வைத்திருந்தது தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த தோட்டாக்கள் அனைத்தும் இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை ஷோபா பஜார் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வேகமாக வந்த காரை போலீஸ்காரர் ஒருவர் மடக்கி பிடித்தார். இருப்பினும், அந்த காரில் பயணம் செய்த திலிப் மிஷ்ரா, ராஜேஷ் குமார் சர்மா மற்றும் ராம் பர்வேஷ் பிரசாத் ஆகியோர் தப்பியோடி விட்டனர்.
இந்நிலையில், காரை பரிசோதித்ததில் அதில் 5000 துப்பாக்கித் தோட்டக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் மிஷ்ரா உள்ளிட்ட மூவரும் மத்திய கொல்கத்தா பகுதியில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மகேஷ் குமார் சிங் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஒரு துப்பாக்கி விற்பனையாளர். இந்த தோட்டாக்கள் அனைத்தும், பூனாவின் ஹிர்கா பகுதியில் உள்ள இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் கடந்த மார்ச் மாதத்தில் தயாரிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது என போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 கருத்துகள்: on "கொல்கத்தாவில் 5 ஆயிரம் துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல்: 4 பேர் கைது"
கருத்துரையிடுக