16 ஜூன், 2010

ஆஃப்கன்:எட்டு ஆண்டுகளில் 500 ஆஃப்கானிய பழங்குடி இன முதியோர்கள் திட்டமிட்டு அழிப்பு

ஆஃப்கனை அமெரிக்க கூட்டு படைகள் தாக்கியதிலிருந்து,இதுவரை சுமார் 5௦௦00க்கும் மேற்பட்ட ஆப்கானிய பழங்குடியின மக்கள், தெற்கு ஆப்கானிஸ்தானில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரஸ் டி.வி. நாளிதளிற்கு ஒரு நீண்ட பெயர்கள் கொண்ட பட்டியல் கிடைத்துள்ளது.

அந்த பட்டியலின் படி, 2001-ற்கு பிறகு தெற்கு ஆப்கானிஸ்தானில் குறிப்பாக காந்தகாரில் 5௦௦00க்கும் மேற்பட்ட ஆ:ப்கானிய முதியவர்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்முதியவர்களின் புகைப்படம், அவர்களின் இனம், பிறந்த நாள், இறந்த நாள், எங்கு அவர்கள் கொல்லப்பட்டு கிடந்தனர் என பல விவரங்கள் அப்பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

இச்செய்தியை குறித்து கேள்விப்பட்ட காபூல் மூத்த அதிகாரி ஒருவர் இதற்கு வருத்தம் தெரிவித்தார்.

இக்கொலைகளை பற்றி ஒரு ஆப்கானிய முதியவர் கூறுகையில் 'இம்மர்மமான கொலைகளால் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு யாரும் வருவதில்லை' என்றும் 'எங்கு அவர்களும் கொள்ளப்பட்டுவிடுவார்களோ!' என்று அவர்கள் பயப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இக்கொலைகளினால் உண்மையான ஆஃப்கானியர்கள் மற்றும் தாலிபான்கள் அழிந்து வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று மேலும் அந்த முதியவர் கூறினார்.
PressTV

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆஃப்கன்:எட்டு ஆண்டுகளில் 500 ஆஃப்கானிய பழங்குடி இன முதியோர்கள் திட்டமிட்டு அழிப்பு"

கருத்துரையிடுக