ஒரிசாவின் கந்தமாலில் கடந்த 2008-ல் நடந்த கலவரத்தின்போது ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக, பாஜக எம்.எல்.ஏ. மனோஜ் பிரதானுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விரைவு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.தாஸ் இந்த தீர்ப்பை செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
கந்தமாலில் கடந்த 2008 ஆகஸ்டு 27-ம் தேதி பரிஹிதா டிகல் என்ற கிறிஸ்தவரைக் கொலை செய்தக் குற்றத்திற்காக பிரதானுக்கு இந்த தண்டனை வழங்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
பிரதான், கந்தமாலில் உள்ள உதயகிரி தொகுதியிலிருந்து ஒரிசா சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் ஜாமீன் பெற்று வெளியில் உள்ளார்.
இந்நிலையில் தீர்ப்பு குறித்து கருத்து கூறிய பிரதான், "தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளேன்' என்றார்.
இந்த வழக்குத் தொடர்பாக பிரஃபுல்லா மல்லிக் என்பவருக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறை தண்டனையுடன், இவர்களிருவரும் தலா ரூ. 6,000 அபராதம் செலுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.
சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களது வீடுகளை தீ வைத்துக் கொளுத்தியது, இனக் கலவரத்தை தூண்டிவிட்டது தொடர்பான குற்றச்சாட்டுகளும் பிரதான் மீது நிலுவையில் உள்ளது.
கடந்த 2008 ஆகஸ்டு 23-ம் தேதி விஎச்பி தலைவர் சுவாமி லக்ஷ்மணானந்தா சரஸ்வதி கொல்லப்பட்டார். இதை அடுத்து கந்தமால் உள்ளிட்ட ஒரிசாவின் பல பகுதிகளில் இனக்கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் சிக்கி 38 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
1 கருத்துகள்: on "கந்தமால் கலவரம்: பாஜக எம்.எல்.ஏ.வுக்கு 7 ஆண்டு சிறை"
coming soon perum talaikal??????
-INSHA ALLAH-
கருத்துரையிடுக