23 ஜூன், 2010

இந்தியாவில் குடிகாரர்களின் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு

இந்தியாவில் குடிகாரர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்தபடி உள்ளது. தற்போது எட்டு சதவீதம் அளவில் மதுபிரியர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இந்தியர்கள் எந்த மது பானங்களை, எப்படி தேர்வு செய்து குடிக்கிறார்கள்? அதன் எண்ணிக்கை எப்படி உயரும் என்று லண்டனை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் "இண்டர் நேஷனல் ஒயின் அண்ட் ஸ்பிரிட் ரெக்கார்டு" என்ற நிறுவனம் ஆய்வு செய்தது. அந்த ஆய்வில் மது விற்பனை கணிசமாக உயரும் என்று தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவில் 20 கோடி அட்டைப் பெட்டி (ஒரு அட்டைப் பெட்டியில் 12 மது பாட்டில்கள் இருக்கும்) மதுபானம் விற்பனை ஆகியுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக 18 லட்சம் அட்டை பெட்டி மதுபானம் விற்பனை யாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடு கையில் 8 சதவீதம் அதிகமாகும்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இந்தியாவில் குடிகாரர்களின் எண்ணிக்கை 8 சதவீதம் உயர்வு"

கருத்துரையிடுக