10 ஜூன், 2010

குஜராத்தில் இஸ்ரேலிய ஆய்வு மையங்கள்

அஹ்மதாபாத்:தாவிரவியல் ஆய்வு தொடர்பான கலைக்காக மிக விரைவில் இஸ்ரேலிய மையங்கள் குஜராத்தில் அமைக்கப்பட உள்ளதாக இஸ்ரேலிய தூதரக அதிகாரி ஒர்மா சாகிவ் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து குஜராத் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கையில் 'காட்டன்,சீசம் மற்றும் கடலை உற்பத்தியில் குஜராத் முன்னிலை வகிப்பதாகவும், விவசாயத்திலும் இஸ்ரேலியர்கள் சிறந்து விளங்குவதாகவும், குஜராத்திய விவசாயத்தை அவர்களின் தொழில்நுட்பத்தின் மூலம் மேலும் வலுபடுத்துவதற்காக, இஸ்ரேலிய அதிகாரிகளுடன் குஜராத் அரசு பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது' என்றும் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே,இத்திட்ட அறிக்கையை இஸ்ரேலிய அதிகாரிகளிடம் குஜராத் அரசு ஒப்படைத்ததை தொடர்ந்து, இந்திய நிறுவனங்களுடன் அவ்வதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதுக்குறித்து,இஸ்ரேலிய தூதரக அதிகாரி ஒர்மா சாகிவ் மேலும் தெரிவிக்கையில்; 'இஸ்ரேலிய மையங்கள் இதுவரை மகாராஷ்டிராவிலும், மும்பையிலும் தான் செயல்பட்டு வருகின்றன.இதனை அகலப்படுத்தும் முயற்சியில்,தற்போது குஜராத்திலும் எங்கள் தாவிரவியல் மையங்கள் அமைக்கப்பட உள்ளன' என்றார்.

கடற்படை பாதுகாப்பு,மாநிலப் பாதுகாப்பு என அனைத்து துறைகளிலும் இஸ்ரேலியர்களை மோடி அரசு கண்மூடித்தனமாக நுழைத்து வருவது, எதிர் காலத்தில் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
source:Mumbai Mirror

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "குஜராத்தில் இஸ்ரேலிய ஆய்வு மையங்கள்"

கருத்துரையிடுக