13 ஜூன், 2010

அப்சல் விவகாரத்தில் உண்மையை புதைக்க வில்போல் வளையும் இந்திய அரசு - கிலானி குற்றச்சாட்டு

பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல் குரு விவகாரத்தில் உண்மையை குழித்தோண்டி புதைக்க இந்திய அரசு வில் போன்று வளைகிறது என்று அதே வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட எஸ்.ஏ.ஆர்.ஜிலானி குற்றம் சாட்டியுள்ளார்.

தெஹெல்கா நாளிதழிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது,'அப்சல் கூறுவதைப்போல் அவருக்கு நீதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

அரசுத் துறைகளில் சிலர் வேண்டுமென்றே அப்சலுக்கெதிராக செயல்படுவதினால் தான் அவருக்கு தொடந்து நீதி மறுக்கப்படுவரதகான காரணம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அப்சலிற்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கவில்லை என்று உச்ச நீதிமன்றமே தீரிப்பில் கூறியதை ஜிலானி நினைவுபடுத்தினார்.

ஒட்டுமொத்த இந்திய மனசாட்சிகளை திருப்திபடுத்தும் பொருட்டு தான், அப்சல் குரு அநியாயமாக தூக்கு தண்டனை விதிக்கப்படிகிறார் என்ற நீதிமன்றத்தின் கருத்தையும் நினைவுகூர்ந்தார்.

அப்சலின் சிறைவாழ்க்கை ஐந்து வருடங்களை எட்டியுள்ளது. சிறைவாழ்க்கையை கொடூரமானது என்று கூறிய ஜிலானி அதனால்தான் அவரின் கருணை மனுவை விரைவு படுத்துங்கள் அல்லது என்னை ஸ்ரீநகர் சிறைக்கு மாற்றுங்கள் என்று அப்சல் கூறியதாகவும் ஆனால் வக்கீல் பன்சாலியோ அப்சல் தன் தூக்கு தண்டனையை விரைவுபடுத்துங்கள் என்று கூறியதாக பொய்யை பரப்பி வருகிறார் என்றார்.

உண்மையில், பன்சாலி அப்சலுக்காக ஒரு போதும் வாதாடவில்லை என்றும் ஜிலானி தெரிவித்தார்.

இதற்கிடையே, அப்சலின் கருணை மனு நான்குவருடமாக டெல்லி அரசிடம் தேங்கி கிடந்ததற்கு காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டெல்லி தேர்தல்களை கணக்கில் கொண்டுதான் அப்போதைய இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் அப்சலின் மனுவை கிடப்பில் போடும்படி டெல்லி அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம், பிஜேபி போன்ற கட்சிகள் ஆதாயம் தேட பாட்டீல் உதவியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித்திடம் இதுபற்றி கேட்கும் போது, இதை அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலிடம் காங்கிரஸ் தலைமை தான் கேட்கவேண்டும் என்றார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அப்சல் விவகாரத்தில் உண்மையை புதைக்க வில்போல் வளையும் இந்திய அரசு - கிலானி குற்றச்சாட்டு"

கருத்துரையிடுக