கர்நாடகா மாநிலம் பட்கலைச் சேர்ந்த அப்துஸ் ஸமத் ஆயுத வழக்கில் கைது செய்யப்பட்டதாக ஏ.டி.எஸ். சப்பைக்கட்டு கட்டினாலும், அவருக்கெதிராக குற்றவாளி என்று சித்தரிக்கும் ஆவணமோ அல்லது ஆதாரமோ இல்லாததனால் தான், அவருக்கு ஜாமீன் மிக எளிதில் கிட்டியுள்ளது.
கடந்த திங்களன்று மும்பை நீதிமன்றத்தில் ஸமதின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, “எதன் அடிப்படையில் அப்துஸ் ஸமத் கைது செய்யப்பட்டார்?” என்ற கேள்விக்கு ஏ.டி.எஸ் அளித்த பதிலோ! “அப்துஸ் ஸமத் ஆயுத வழக்கில் கைது செயப்படுள்ளதாகவும், ஆயுத வழக்கின் ஆவணங்களின் படி ‘அப்துல்’ என்ற பெயர் இடம் பெற்றுள்ளதால் தான் ‘அப்துஸ் ஸமத்’ கைது செய்யப்பட்டதாக ஏ.டி.எஸ். உளறியது.
அப்போது குறுக்கிட்ட ஸமதின் வழக்கறிஞர் முபீன் ஷோல்கர், "‘அப்துல்’ என்பது முஸ்லீம்களின் பொதுவான முன்பெயர் என்றும் அப்படியென்றால் இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான அப்துல்களை ஏ.டி.எஸ். கைது செயும்மா?" என்று கிண்டலாக கேட்டார். "அப்படியே இருந்தாலும் கூட, ஏன் குற்றப்பத்திரிகை ‘அப்துலின்’ பெயரில் தாக்கல் செய்யப்படாமல் ‘அப்துஸ் ஸமத்’ என்ற பெயரில் தாக்கல் செய்யப்பட்டது?" என்று கேள்வி எழுப்பினார்.
"ஆயுதவழக்கின் ஆவணங்களின் படி ‘பைக்’ என்ற நபர் தான் ஏ.டி.எஸ். தேடப்படும் ஆளே தவிர அப்துலோ அல்லது அப்துஸ் ஸமதோ அல்ல" என்று முபீன் மேலும் விவரித்தார்.
ஆயுதவழக்காக இருந்தாலும் அல்லது புனே குண்டுவெடிப்பு வழக்காக இருந்தாலும், அப்துஸ் ஸம்திற்கெதிராக ஒரு ஆதாரமும் வைக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டிய நீதிபதி எஸ்.எல். பதான், ஏ.டி.எஸ். உண்மையான கோணத்தில் இவ்வழக்கை விசாரிப்பதிலிருந்து தவறிவிட்டதாக கூறி அப்துல் ஸமதிற்கு ஜாமீன் வழங்கினார்.
கடந்த ஆறு வருடத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட மும்பை ஏ.டி.எஸ். அரசியல்வாதிகளை திருப்தி படுத்த பலமுறை சூழ்ச்சிகள் மேற்கொண்டும், ஸமத் போன்ற வழக்குகள் ஏ.டி.எஸ்ஸின் முகமூடியை கிழித்துள்ளது. இதேபோல தான், மலேகான் வழக்கிலிருந்து ஹிந்துத்துவ தீவிரவாதிகளை MCOCA என்ற படிக்கையிலிருந்து விடுவிக்க முயற்சி செய்திருந்தபோதும், மும்பை ஏ.டி.எஸ். பல அவமானங்களை வாங்கிக் கட்டியுள்ளது.
Siasat and Mumbai Mirrorஐ.பியின் தொடர்பில் இருக்கும் சில அதிகாரிகளின் சூல்சிகளினால் தான் மும்பை ஏ.டி.எஸ்சிற்கு ஒருபோதும் நல்ல பெயர் கிட்டுவதில்லை என்று சட்ட நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
source:siasat,MM
0 கருத்துகள்: on "‘அப்துல்’ என்ற பெயர் இருந்ததனால் தான் 'அப்துஸ் ஸமத்' கைது செய்யப்பட்டார் – நீதிமன்றத்தில் ஏ.டி.எஸ். உளறல்"
கருத்துரையிடுக