ஒபாமா புஷ்ஷை விடவும் ஒரு படி மேல்!
எதில் ஒரு படி மேல் என்று கேட்கிறீர்களா? சட்டமோ, மனித உரிமைகளோ எந்த அடிப்படையும் இல்லாமல் "பயங்கரவாதத்திற்கெதிரான போர்" என்ற போர்வையில் மனிதர்களைச் சித்ரவதைப்படுத்துவதிலும்,கொடூரமான கொலைகளுக்கு அனுமதி வழங்குவதிலும் ஒபாமா புஷ்ஷை விடவும் ஒரு படி மேல் சென்று விட்டார்.
"பயங்கரவாதி" என்று பிடிக்கப்பட்ட அன்வர் அல் அவ்லாகி என்ற முஸ்லிமை ஒரு விசாரணையும் இல்லாமல் கொல்வதற்கு கடந்த மாதம் ஒபாமா உத்தரவிட்டார். அல்காயிதாவின் "பயங்கரவாத" திட்டங்களின் பங்காளி என்பதுதான் அன்வர் அல் அவ்லாகியின் மேல் அமெரிக்கா சுமத்திய குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டு தெளிவாக்கப்படவில்லை. ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
ஆனால் விசாரணையில்லாமால் கொள்ளப்படவேண்டிய பட்டியலில் அன்வர் அல் அவ்லாகியின் பெயரையும் சேர்த்திருக்கிறது ஒபாமா அரசு.
2007 ல் ஒரு ஈராக் குழுவை, அருகில் வைத்து அநியாயமாக துப்பாக்கியால் சுட்டு கொன்றது அமெரிக்க இராணுவம். இது கேமராவில் பதிவாகி வெளிவந்தது. இரண்டு பத்திரிகையாளர்கள் இரண்டு குழந்தைகள் உட்பட மொத்தம் 12 பேர் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர். சுடுவதை தடுக்க வந்தவர்களையும் அமெரிக்க இராணுவம் சுட்டுத்தள்ளியது. இதற்கு காரணமானவர்களின் மேல் ஒரு நடவடிக்கையும் எடுக்க ஒபாமா அரசு தயாராக இல்லை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஒபாமா புஷ்ஷை விடவும் ஒரு படி மேல்!"
கருத்துரையிடுக