டெல்லி:சீனாவிலிருந்து தயாராகி வரும் கம்பெனி அல்லாத அனைத்து செல்போன்களையும் தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கம்பெனி அல்லாத செல்போன்கள் தயாரிப்பில் உலகிலேயே முதலிடத்தில் சீனாதான் உள்ளது. தினம்தோறும் பல பெயர்களில் இங்கு செல்போன் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.குறிப்பாக இந்தியாவுக்குதான் இந்த ரக செல்போன்கள் ஏராளம் வருகின்றன.
2009-2010 நிதியாண்டில் இவற்றின் மதிப்பு மட்டும் ரூ 4200 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.இவை பெரும்பாலும் கணக்கிலேயே வராமல் போவதால், விற்பனை வரி, மதிப்புக் கூட்டு வரி, நகர் நுழைவு வரி, ஆக்ட்ராய் (உள்ளூர் வரி) போன்றவற்றிலிருந்து தப்பித்துவிடுகிறது. இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கும் ஏதுவாக அமைந்துவிடுகின்றன இந்த செல்போன்கள்.
இவற்றைத் தடுக்க,இத்தகைய செல்போன்களை முழுமையாகத் தடை செய்வதே ஒரே வழி என அரசு முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவை மத்திய தொலைத் தொடர்புத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்: on "சீன செல்போன்களுக்குத் தடை விதிக்க மத்திய அரசு முடிவு"
கருத்துரையிடுக