துருக்கி பிரதமர் தய்யிப் எர்டோகனை கொலைச் செய்ய வந்த மொஸாத் உளவாளியின் சதியை துருக்கி அதிகாரிகள் முறியடித்துள்ளதாக ஜோர்டான் பத்திரிகை ‘அல் மனார்’ செய்தி வெளியிட்டுள்ளது.
துருக்கியின் அதிகாரப்பூர்வ தகவல்களை மேற்கோள்காட்டி அவ்வார இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், எர்டோகனின் கொலை முயற்சி துருக்கி பாதுகாப்புத் துறையால் தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கி தீவிரவாதிகளான பி.கே.கே எனப்படும் ‘குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சியை’ இஸ்ரேல் தூண்டிவிட்டு இவ்வகையான முயற்சிகளில் ஈடுபட்டுவருவதாக ‘அல் மனார்’ தெளிவுபடுத்தியுள்ளது.
முன்னதாக துருக்கி ‘Think Tank’ டைரக்டர் சேதத் லசிநேர், இஸ்ரேல் பி.கே.கே.விற்கு துருக்கி, ஈராக் போன்ற நாடுகளில் தீவிரவாதப் பயிற்சிகளை அளிப்பதாக தெரிவித்திருந்தார்.
இதற்கு பிறகு அன்மையில், இஸ்ரேலின் உறவுகளை துருக்கி முறிக்கப் போவதற்கான முயற்சிகளிலும் அந்நாடு இறங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாயின.
தய்யிப் எர்டோகனின் ஆட்சியை பிடிக்காத இஸ்ரேலியர்கள், தற்போது அவரை தீர்த்துக்கட்டும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர்.
PressTV
0 கருத்துகள்: on "துருக்கி பிரதமரை கொல்ல வந்த மொஸாத் உளவாளி – சதி முறியடிப்பு"
கருத்துரையிடுக