டெல்லி:உள்நாட்டு பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுடன் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் குடியரசுத் தலைவர் மாளிகையில் விரிவான ஆலோசனை நடத்தினர்.
முன்னதாக ஜனாதிபதியும் பிரதமரும் தனியாக ஆலோசித்தனர். அதன்பின், அமைச்சர் சிதம்பரமும் அவர்களுடன் இணைந்துக் கொண்டார். இந்த சந்திப்பு 1 மணி நேரத்துக்கும் அதிகமாக நீடித்தது.
போபால், நக்ஸல்கள் உள்ளிட்ட தேசிய, சர்வதேச விவகாரங்கள் குறித்து அவர்கள் விவாதித்ததாகத் தெரிகிறது.
மேலும் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின் தண்டனையை நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

0 கருத்துகள்: on "அப்சல் குரு மரண தண்டனை ஜனாதிபதியுடன் பிரதமர், ப.சிதம்பரம் ஆலோசனை"
கருத்துரையிடுக