15 ஜூன், 2010

மோடியின் மோசடி விளம்பரம்:ஜனாதிபதியின் தலையீடு தேவை- ஆஷம்கர் மக்கள் கோரிக்கை

பாட்னா:ஆஷம்கரில் வசிக்கும் மக்கள் ஒரு குழுவாக சென்று நரேந்திர மோடியின் அரசாங்கத்தை விமர்சிக்கும் படியாக வெளியான விளம்பரத்தில் ஆஷம்கர் மாணவிகளின் புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டுள்ளன இந்த விசயத்தில் ஜனாதிபதின் தலையீடு தேவை என ஆஷம்கர் மாவட்ட தலைமை நீதிபதியை சந்தித்து மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

இதில் குஜராத் முஸ்லிம்கள் வசதியாகவும் வளமாகும் வாழ்வதாக காண்பிப்பதற்காக ஆஷம்கர் சிபில் கல்லூரி முஸ்லிம் பெண்களின் புகைப்படம் காட்டப்பட்டுள்ளது. இது குஜராத் முஸ்லிம்களின் வாழ்க்கை வளத்தையும் வசதியையும் பற்றிய ஒரு விளம்பரமாகும்.

"மோடியின் அரசாங்கத்தைப் பற்றிய ஒரு விளம்பரத்தில் ஆஷம்கர் மாணவிகளின் புகைப்படம் வெளியிபட்டது கடும் கண்டனத்துக்குரியது" என ஆஷம்கர் மாவட்ட தலைமை நீதிபதியிடம் மனு தாக்கல் செய்த குழுவின் உறுப்பினர்களின் ஒருவரான மஷீஹுதீன் சஞ்சரி தெரிவித்தார்.

மேலும் "குஜராத் அரசின் இந்த நேர்மையற்ற தவறான செயலை ஜனாதிபதி தலையிட்டு தண்டிக்க வேண்டும் எனவும் நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம்" என்றும் அவர் கூறினார்.

"இது முஸ்லிம்களை எமாற்றக் கூடிய ஒரு செயலாகும். இந்த விளம்பரத்தில் ஆஷம்கர் முஸ்லிம் மாணவிகளின் புகைப்படங்களை வெளியிட்டு குஜராத் முஸ்லிம்கள் வசதியாகவும் வளமாகும் நல்ல வாழ்க்கை வாழ்வதாக காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு காட்டுவதற்கு அவர்களால் ஒரு புகைப்படத்தைக் கூட குஜராத்தில் இருந்து தேட முடியாது என்பதை அவர்கள நிரூபித்துள்ளனர்.

இம்மாதிரியான நடவடிக்கை அவர்களின் உண்மை முகத்தை காட்டி உள்ளது. அவர்கள் முஸ்லிம்களை ஏமாற்றி மோசடி செய்கின்றனர்."இவ்வாறு மசீகுதீன் தெரிவித்தார்.

இவர் 'People's union for civil liberties' என்ற அமைப்பின் ஆஷம்கருகான வட்ட பொறுப்பாளர் ஆவார்.இந்த அமைப்பின் மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

PUCL -ன் உறுப்பினர்கள் தாரிக் சபிகீ மற்றும் ராஜீவ் யாதவ் மற்றும் பலரை உள்ளடக்கியது இந்த வெளிப்பாடாகும்.
source:TCN

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மோடியின் மோசடி விளம்பரம்:ஜனாதிபதியின் தலையீடு தேவை- ஆஷம்கர் மக்கள் கோரிக்கை"

கருத்துரையிடுக