மும்பைஃமகாராஷ்டிரா டி.ஜி.பி யாக சிவாநந்தன் நியமனத்தை அடுத்து, மும்பை வக்கீல் ஆர்.ஆர்.திரிபாதி மும்பை நீதிமன்றத்தில் ‘பில்’ மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஹசன் கபூர் மற்றும் பி.பி ஸ்ரீவாஸ்தவ் ஆகிய மூத்த அதிகாரிகளை ஒதிக்கிவிட்டு, சிவாநந்தன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளது நியாமல்ல என்றும் அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
பிரகாஷ் சிங்க் வழக்கில் நீதிமன்ற ஆணையையும் இதில் பின்பற்றப்படவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இதே வக்கீல் தான், அனாமி ராய் மகாராஷ்டிரா டி.ஜி.பி.யாக நியமித்ததை கண்டித்து தாக்கல் செய்த மனுவில், அவருக்கு வெற்றி கிட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்திய சட்ட விதிகளின் படி, நியாமான காரணங்கள் இருந்தால் அரசின் அதிகாரிகள் நியமனத்தை மக்கள் மாற்ற சக்தி பெற்றவர்கள் என்பது என்று சட்டம் படித்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும் என்றால் அது மிகையாகாது.
source:Mumbaimirror
0 கருத்துகள்: on "மகாராஷ்டிரா டி.ஜி.பி. நியமனத்தை எதிர்த்து பிரபல மும்பை வக்கீல் ‘பில்’ மனு"
கருத்துரையிடுக