கொச்சி:ஆதாரமின்றி எல்லா வழக்குகளிலும் மதானியை பழிசுமத்துவது சரியில்லை என்று நீதிபதி VR.கிருஷ்ணா ஐயர் கூறுகிறார். மேலும் மதானியின் மீது சிறப்பு அக்கறை கொண்ட ஒரு கும்பல் மதானிக்கு எதிராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு பேசுவதால் மதானியின் ஆதரவாளர் என்பது அர்த்தம் இல்லை எனவும் மதானி புகழ் பெற்ற முஸ்லிம் என்பதனாலேயே அவர் மேல் வழக்குகளை பதிவு செய்வது தெளிவாகியிருக்கிறது என்றும் இவ்வாறான நடவடிக்கைகள் தவறு என்றும் கிருஷ்ணா ஐயர் குறிப்பிட்டார்.
9 வருடங்களுக்குப் பிறகே போதுமான ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றத்தால் மதானி விடுதலை செய்யப்பட்டார். அரசாங்கமே இதற்கு பொறுப்பு என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பினராய் விஜயனின் எதிர்த்தரப்பினர் மதானிக்கு எதிராக திரும்பிவிட்டனர். சில பேர் எவ்வித ஆதாரமும் இல்லாமல் மதானி குற்றவாளி என்று நினைக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
twocircles
0 கருத்துகள்: on "'ஆதாரமின்றி எல்லா வழக்குகளிலும் மதானியை குற்றம்சாட்ட கூடாது': நீதிபதி கிருஷ்ணா ஐயர்"
கருத்துரையிடுக