பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டார்கள் என்ற குற்றசாட்டில் அஹ்மத் அப்துல்லா , உமர் பாருக், அமன் ஹஸன் ,வாகர் ஹுஸைன் கான் மற்றும் ராமி சம்சம் என்ற ஐந்து அமெரிக்க முஸ்லிம் வாலிபர்கள் இந்த வருடம் ஜனவரியில் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டனர்.
இந்த அமெரிக்க முஸ்லிம் வாலிபர்கள் ஐந்து பேரிடம், அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களான CIA, FBI மற்றும் பாகிஸ்தான் புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வந்தனர். இவர்கள் மீதான விசாரணைகள் பல கட்டங்களாக நடைபெற்றது, ஐந்து இளைஞர்கள் மீது, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அமெரிக்காவின் வாஷிங்டன், விர்ஜினியா மாகாணத்திலிருந்து பாகிஸ்தானுக்கு உறவினர் ஒருவரின் திருமணம் மற்றும் சுற்றுலா நோக்கம் கருதி தாங்கள் வந்ததாகவும், பாகிஸ்தானில் உள்ள வரிய குடும்பங்களுக்கும், அகதிகளுக்கும் உதவும் நோக்குடன் இருந்ததாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றை கருத்தில் கொள்ளாத பாகிஸ்தான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை இவர்களுக்கு தலா பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்புக்கு எதிராக இவர்கள் மேல்முறையீடு செய்யவுள்ளனர்.
இதே வேளை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தை சேர்ந்த கேரி புரூக்ஸ் புளக்னர் (51) என்ற அமெரிக்க நபர் கை துப்பாக்கி, கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யபட்டார். இவர் தான் உஸாமா பின் லேடனை கொலை செய்ய பாகிஸ்தான் வந்துள்ளதாக கூறியுள்ளார். இவர் தற்போது பாகிஸ்தானில் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
இவரின் உறவினர்களின் தகவலின் படி விரிவாக பார்க்க இவர் மிக விரைவில் விடுதலையாக இருப்பதாக தெரியவருகின்றது.
இந்த இரு பிரிவினரும் அமெரிக்கர்கள் தான்.
பயங்கர ஆயுதங்களுடன் கொலை நோக்குடன் நடமாடிய நபர் விடுதலையாக போகின்றார். எந்த ஆயுதங்களும் இன்றி நடமாடிய முஸ்லிம் வாலிபர்கள் பத்து வருட தண்டனை பெற்றுள்ளனர். இது அமெரிக்கா பாகிஸ்தானுக்கு கற்றுக் கொடுக்கும் சட்டம், சமுகம், அரசியல் அளவுகோல்களை பாகிஸ்தான் விதிவிலக்கு இன்றி பின்பற்றுவதை காட்டுவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
PressTV
0 கருத்துகள்: on "பாகிஸ்தானில் அமெரிக்க முஸ்லிம் இளைஞர்கள் ஐவருக்கு பத்து வருட சிறை! கேரி புரூக்ஸ்க்கு விடுதலை?"
கருத்துரையிடுக