அஹ்மதாபாத்:ஷொராஹ்ப்தீன் போலி என்கவுண்டர் வழக்கில் மறைமுகமாக தொடர்புடைய மாவட்ட கூட்டுறவு வங்கிச் சேர்மன் அஜய் படேல் மற்றும் அவரின் உதவியாளரான யஷ்பால் சுதாச்சமா ஆகிய இருவர் வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பியுள்ளதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
இவ்வழக்கு தொடர்பாக, கடந்த ஏப்ரல் 30ம் தேதி இவர்களுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பிய பிறகு இவர்கள் வெளிநாடு தப்பிச் சென்றுள்ளனர்.
எனினும்,42 நாட்கள் வெளிநாட்டிலிருந்த பிறகு வேறுவழியின்றி இவர்கள் குஜராத் திரும்பியுள்ளனர்.
வரும் அடுத்த சில நாட்களில் சி.பி.ஐ. இவர்களை விசாரிக்க உள்ளது. அரசியல் வாதிகளின் பின்னணியில் ஷொராஹ்ப்தீன் வழக்கு சாட்சிகளை மிரட்டியதாக இவர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சரியாக ஒத்துழைக்காவிடில் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்படுவீர்கள் என்றும் சி.பி.ஐ இவர்களுக்கு செக் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு தனியார் பில்டரிடம் மேற்கொண்ட விசாரணையில் அஜய் படேல் மற்றும் யஷ்பாலின் பங்கினை சி.பி.ஐ பதிவுச் செய்துள்ளது.
இதே பில்டர் தான், ஐ.பி.எஸ் அதிகாரி அபே சுதாச்சமா இவ்வழக்கின் சாட்சிகளை மிரட்டும் போது, அதை படம் பிடித்து வீடியோவாக சி.பி.ஐயிடம் ஒப்படைத்துள்ளார் என்றும் சி.பி.ஐ வட்டாரங்களை மேற்கோள்காட்டி வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
source:TimesofIndia
0 கருத்துகள்: on "ஷொராஹ்ப்தீன் போலி என்கவுண்டர் வழக்கு: ஓடிப்போன சாட்சிகள் நாடு திரும்பினர்"
கருத்துரையிடுக