24 ஜூன், 2010

நாங்கள் இதை அல்லாஹ்விடமே விட்டுவிட்டோம்!

பாராளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கில் அப்சல் குருவிற்கு தூக்குத் தண்டனையை உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதையடுத்து, "இதை நாங்கள் அல்லாஹ்விடமே விட்டுவிட்டோம்" என்பதே அவரின் குடும்பத்தின் தற்போதைய பதிலாக உள்ளது.

உள்துறை அமைச்சகம் இவ்வாறு தீர்மானித்திருப்பதைப் பற்றி எங்களுக்கு ஏதும் தெரியாது என்று குருவின் உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.

மத்திய அரசு, குருவின் கருணை மனுவை நிராகரிக்கும்படி குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீலை கேட்டுகொண்டிருப்பதாக பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.

குருவின் தண்டனையை அரசு விரைவாக நிறைவேற்றாது என்று குருவின் உறவினர் நம்பிக்கை தெரித்துள்ளார். மேலும் "இதை நாங்கள் அல்லாஹ்விடமே விட்டுவிட்டோம், அவனே நீதி வழங்குவதில் சிறந்தவன், எழுதப்பட்ட விதியை நாங்கள் நம்புகிறோம், இறைவனின் விருப்பத்திற்கு முன் நாங்கள் முழுவதும் அடிபணிகிறோம்" என்றனர்.

தில்லி திஹார் சிறையிலேயே அதிக காலங்கள் தனிமையில் சிறைவாசத்தை கழித்ததால், குடியரசுத்தலைவரை தனது கருணைமனு மீது விரைந்து முடிவெடுக்கக் கோரி குரு கடிதம் எழுதியிருப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

தன் மனுவிற்கு முடிவு எடுக்க தாமதமானால் தன்னை ஸ்ரீநகர் மத்திய சிறைக்கு மாற்றும்படி குரு கேட்டுக்கொண்டார், ஆனால் அந்த விண்ணப்பம் என்ன ஆனது என்று கூட தெரியவில்லை.

ஜம்மு கஷ்மீரில் மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை கருவிகள் விற்று வந்த குருவுக்கு, பாராளுமன்றத் தாக்குதலுக்கு சதி செய்ததாகக் கூறி 2002ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அக்டோபர் 20, 2006ல் நிறைவேற்ற இருந்த தண்டனை அவரது மனைவியின் கருணை மனுவால் தள்ளி வைக்கப்பட்டது.

வழக்கப்படி குடியரசுத்தலைவர் உள்துறை அமைச்சகத்திடமும், அமைச்சகம் டெல்லி அரசையும் கருத்துகளுக்காக கேட்கும்.டெல்லி அரசு தூக்குத் தண்டணையை சாதகமாக்கியும் ஆனால் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொள்ளும் படியும் கூறி கோப்பை கடந்த மாதம் திருப்பிவிட்டது.

--IANS

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நாங்கள் இதை அல்லாஹ்விடமே விட்டுவிட்டோம்!"

கருத்துரையிடுக