27 ஜூன், 2010

பிரிட்டனை தொடர்ந்து கனடாவிலும் டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு தடை

மும்பை:பிரிட்டனை தொடர்ந்து தற்போது கனடாவிலும் டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் ஜாகிர் நாயக் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள டாக்டர் ஜாகிர், பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதை தொடர்ந்து, தான் வெளி உறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை இத்தடைகளை அகற்ற உதவுமாறு கேட்டுக்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.

கனடா தேசிய பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள அந்த செய்தியில், பிரபல இந்திய முஸ்லீம் பேச்சாளர் ஒருவர் கடந்த வாரம் பிரிட்டனில் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இனி கனடாவிலும் அவர் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, டாக்டர் ஜாகிர் நாயக் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்தார். தன் வீடியோ கேசட் ஒன்றை செய்தியாளர்களிடம் ஒப்படைத்த நாயக், தன் கருத்துக்கள் திரித்து எடுத்துக் கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனைத் தொடர்ந்து கனடாவிலும் தான் தடை செய்யப்படுள்ளதற்கு அரசியல் பின்னணிகள் தான் காரணம் என்று நாயக் மேலும் விளக்கினார்.

வரும் வாரங்களில் ஐ.ஆர்.எப். நிகழ்ச்சி ஒன்று கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், டாக்டர் ஜாகிர் நாயக் தடை செய்யப்பட்டுள்ளது கனடா முஸ்லீம்களிற்கு மட்டுமல்லாமல் மற்ற மதத்தார்களையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
DNA

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பிரிட்டனை தொடர்ந்து கனடாவிலும் டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு தடை"

கருத்துரையிடுக