8 ஜூன், 2010

அநீதியின் விளையாட்டு

இருபத்தாறு வருடம் காத்திருந்தன் பலனாக போபால் விஷவாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்துள்ளது என்று கூற இதயம் உடையவர்களுக்கோ மனித நேயம் சிறிதளவேனும் கொண்டவர்களுக்கோ சாத்தியமில்லாத ஒன்றாகும். 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாலையில் விஷவாயுவை சுவாசித்து அநியாயமாக மரணமடைந்த அப்பாவிகள், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மரண அவதிப்பட்டு இறந்துபோன 15 ஆயிரத்திற்கும் அதிகமான ஏழைகளின் குடும்பங்களுக்கு போதிய நிதியுதவியோ அல்லது தொடர் சிகிட்சையோ அளிக்காமல் நழுவிய இந்திய அரசு தற்பொழுது நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய நீதியையும் மறுத்துள்ளது.

வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட யூனியன் கார்பைடு இந்தியாவின் சேர்மன் கேசவ் மஹிந்திராவுக்குக்கும் இன்னும் ஏழுபேருக்கும் இரண்டு ஆண்டுகள் வீதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

போபால் விஷவாயு விபத்து போன்ற தொழிற்சாலை விபத்துகளுக்கு காரணமானவர்கள் எதிர்காலத்தில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்பதற்கான நற்செய்திதான் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

இந்திய தேசத்தின் வளங்களை பயன்படுத்தி இந்திய குடிமக்களை கூலிக்கு வேலைக்கு அமர்த்தி அவர்களை அடிமைகளைப் போல் நடத்தி அவர்களுடைய சக்திகளை உறிஞ்சி லாபம் சம்பாதித்துவிட்டு பின்னர் அவர்களை விஷவாயுமூலம் கொன்றாலோ அல்லது ஏதேனும் விபத்துகள் மூலம் அவர்களின் உயிர் பறிபோனாலோ பாதிக்கப்பட்டவர்களுக்காக எவ்வித நடவடிக்கையையும் இந்திய அரசு மேற்கொள்ளாது என்பதன் இதயத்தை நொறுக்கும் நிதர்சனம்தான் இந்த நீதிமன்றத் தீர்ப்பு.

உலகமயமாக்கலின் விளைவாக உலகின் பல பகுதிகளிலிருந்து ஆபத்தான தொழில்ககளும், தயாரிப்புகளும் இந்தியாவில் குடியேறிக்கொண்டிருக்கும் காலக்கட்டத்தில்தான் இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

உள்ளத்தில் சிறிதளவேனும் இரக்க உணர்வுக் கொண்ட எந்தவொரு இந்தியனுக்கும் இந்த தீர்ப்பை கடுமையான உள்ளக்கொதிப்போடும், வெறுப்போடும்தான் பார்க்க இயலும்.

இவ்வழக்கில் குற்றவாளிகளான எட்டு இந்தியர்களுக்கு மட்டும்தான் மென்மையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்வழக்கின் முக்கிய சூத்திரதாரியான யூனியன் கார்பைடின் அன்றைய சேர்மன் வாரன் ஆண்டர்ஸனும் சர்வதேச அளவில் அக்கம்பெனியின் முக்கிய பொறுப்புகளில் அமர்ந்துள்ள பெரும் புள்ளிகளும் எவ்வித விசாரணையையோ அல்லது தண்டனையையோ பெறாமல் உல்லாசமாக வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களைக் குறித்து எந்தவொரு குறிப்பும் இந்த தீர்ப்பில் இல்லாதது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

இந்தியாவின் நீதி பீடத்தில் இந்தியர்களுக்கு அநீதியும் அந்நியனுக்கு சிறப்பு நீதியுமா? இது மிகவும் கொடூரமான அநீதியாகும். இந்த தீர்ப்பின் மூலம் ஏற்படும் பாதிப்புகளை நாம் புரிந்துக்கொள்ள வேண்டியுள்ளது.

இந்தியாவில் ஏற்படும் தொழில் விபத்துகளுக்கு எவ்வித விலையும் கொடுக்க வேண்டியதில்லை என்பதற்கான நற்செய்தியை இந்தியாவில் முதலீடுச் செய்யும் அந்நிய தேசத்தவர்களுக்கு அளித்து எதிர்காலத்தில் இதற்கெல்லாம் கவலைப்படத் தேவையில்லை என்ற உறுதியைத்தான் இத்தீர்ப்பு அளிக்கிறது.

தற்பொழுது அணுசக்தியினால் விபத்து உருவானால் அளிக்க வேண்டிய நஷ்ட ஈட்டை எளிமையாக்குவதற்கான சட்டத்தை இயற்றுவதில் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளதும் கவனிக்கத்தக்கதாகும். இது அனைத்து வரம்புகளையும் மீறிய செயலாகும்..

இந்த தேசம் மற்றும் இந்நாட்டில் வாழும் மக்களின் விருப்பங்களை பூரணமாக புறக்கணித்து விட்டு அரசு மேற்கொள்ளும் கொடூரமான அணுகுமுறை இது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இந்த தேசத்தில் அநீதத்திற்கும் அக்கிரமத்திற்கும் ஆளாக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணமும்,நீதியும் கிடைக்காத சூழலில் இந்த தேசத்தில் அரசும்,நிர்வாகமும்,நீதிமன்றங்களும் தேவையா? என்பது நீதியை விரும்புகின்ற அனைத்து இந்திய உள்ளங்களிலும் எழுந்துள்ளது மிகப்பெரிய கேள்வியாகும்.

விமர்சகன்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

4 கருத்துகள்: on "அநீதியின் விளையாட்டு"

இனியன் சொன்னது…

பேசாம பாதிக்கப்பட்டவங்கள்லாம் சேர்ந்து அந்த 7 பேரையும் வெட்டி கொலை செய்ய வேண்டும் அதுக்கு திட்டம் தீட்ட வேண்டும். நீதிமன்றமாவது மண்ணாவது.

Sirajudeen சொன்னது…

இனியன் அவர்களின் மனக்குமுறல் தான் வார்த்தையாக வெளிவந்துள்ளது. இந்திய நாட்டில் ஒடுக்கப்பட்டவர்கள் அரசியல் மற்றும் அனைத்து ரீதியிலும் சக்தி பெறுவது ஒன்றே இதற்கான தீர்வாக அமையும். அதற்கான பணியை சமூக ஆர்வலர்கள் சிரமேற்கொண்டு செய்யவேண்டியது காலத்தின் கட்டாயம்.

பெயரில்லா சொன்னது…

The Bhopal disaster was an industrial terrorism that took place at a pesticide plant owned and operated by Union Carbide (UCIL) in Bhopal, Madhya Pradesh, India.The factory was set up illegally after bribing politicians and IAS officers.

Around midnight on December 2–3, 1984, the plant released methyl isocyanate gas and other toxins, resulting in the exposure of over 500,000 people.

Estimates vary on the death toll. The official immediate death toll was 2,259 and the government of Madhya Pradesh has confirmed a total of 3,787 deaths related to the gas release. Other government agencies estimate 15,000 deaths.

Others estimate that 8,000 died within the first weeks and that another 8,000 have since died from gas-related diseases. In any human rights violations, you catch the Chief Executive Officer and punish him for bribing and killing the innocent.

Who was the CEO of Union carbide? It was Warren Anderson ( similar to Osama bin Laden) Indian Govt had collated all the necessary evidence to arrest him and punish him.

India a huge emerging superpower could not punish the terrorist Warren Anderson who caused the deaths of 15,000 innocent Indians by his greed for money. India could not extradite him. W.Anderson faced no prosecution in the USA.

Why because he was a superior human being, a whiteman, a powerful rich American. The world thrives on hypocrisy and double standard.

But in order to catch and kill saddam hussain, the US can kill millions of innocent Iraqis, this is American justice. Please follow the case of Headley now, more or less same story. Who knows Headley was a CIA double agent.

பெயரில்லா சொன்னது…

American industrialists have murdered a thousand times more innocent people than the number of innocent people supposed ( still no proof) to have been killed by Osama bin laden by the WTC attack.

But one thing we are sure. There is no proof that Osama Bin Laden did the WTC attack but we know that Warren Anderson of the USA was responsible for the brute carnage of 35,000 people in the Union carbide massacre. Warren Anderson was the CEO of Union carbide, Bhopal. He was the Chairman.

Did India ever ask for extradition of Warren Anderson? Why NOT? Why not because he is a super human white man who can mercilessly kill the innocent and pay pittance after 25 years.

This is the social justice that we see in the west, but the same west gives a huge lip service to human rights, that too after killing 12 lakh innocent Iraqis and several thousand Afghans under the pretext of punishing, catching, killing Bin Laden.

After all Bin Laden himself is an imaginary enemy, an excellent pretext to dominate the world and make the third world remain poor and continue its exploitation by the wests military-oil-industrial complex.

கருத்துரையிடுக