டெல்லி:ஜாமியா மில்லியா இஸ்லாமிய கல்லூரியில் சேர இந்த ஆண்டு விண்ணப்பித்த மாணவர்களில், சுமார் 8 பேர்களின் ஆள்மாறாட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுக் குறித்து,கல்லூரி நிர்வாகிகள் கூறியதாவது, விண்ணப்பப்படிவத்தில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படத்தை B.Tech நேர்காணலுக்கு வந்த மாணவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில், இந்த ஆள்மாறாட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தனர். நுழைவுத் தேர்வு எழுத வந்த 6 மாணவர்களின் புகைப்படங்கள் நேர்காணலிற்கு வந்த நபர்களுடன் ஒன்று சேரவில்லை என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இந்த ஆறு மாணவர்கள் சிக்கியதும் மற்ற இரண்டு மாணவர்கள் தப்பி ஓடிவிட்டதாக ஜாமியா மில்லியா மீடியா ஒருங்கிணைப்பாளர் சிமி மல்ஹோத்ரா தெரிவித்தார்.
இதுபோல், புகைப்படத்தையும், நேர்காணல் நபரையும் ஒப்பிடுவது இவ்வாண்டிலிருந்து தான் அமல் செய்யப்பட்டது. இதன் மூலம், ஆள்மாறாட்டம் மற்றும் ஏமாற்றுதல் போன்ற சதி வேலைகளை முறியடிக்க முடியும் என்று ஜாமியா நிர்வாகம் நம்புகிறது.
இவர்கள் அனைவரின் விவரங்களும் யுனிவர்சிட்டி போர்டிற்கு நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
அலிகார் யுனிவர்சிட்டியில் பிளவுகளை உண்டாக்கும் சதி வேலைகள் அரங்கேறும் இந்நிலையில், இந்த ஆள்மாறாட்டங்கள் ஜாமியா நிர்வாகத்தை விழிக்கச் செய்துள்ளது.
Twocircles
0 கருத்துகள்: on "ஜாமியா கல்லூரியில் சேர ஆள்மாறாட்டங்கள் - சதிகள் கண்டுபிடிப்பு"
கருத்துரையிடுக