13 ஜூன், 2010

மோடியின் வருகையை எதிர்த்து பீகார் முஸ்லீம்கள் கருப்பு கோடி ஏந்தி போராட்டம்

பாட்னா:குஜராத் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியின் வருகையை கண்டித்து முஸ்லிம் யுனைடட் ஃபிரண்ட் (எம்.யு.எப்.) ஆர்பாட்டம் நடத்தியது.

பீகாரை குஜராத் ஆக்க முயல்வதாக முதல்வர் நிதிஷ் குமாரை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

பாட்னா லோங்கர்டோளியில் ஆரம்பித்த இப்பேரணி அசோக் ராஜ்பாத் வழியாக கார்கில் சாக் செல்லும் வழியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.பின்னர் சில மணிநேரத்திற்கு பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக, எம்.யு.எப். தலைவர் அபி கைசேர் போராட்டத்தின் போது பேசிதாவது, மோடி மற்றும் வருண் காந்தி பீகாருக்குள் அனுமதித்ததற்காக நிதிஷ் குமாரை வன்மையாக சாடினார்.

பின்னர், முஸ்லீம்களுக்கெதிராக நடத்தப்பட்ட 2002 கலவரத்தையும், அதற்கு பிறகு நடத்தப்பட்ட போலி என்கவுண்டர்களையும் சுட்டிக்காட்டி மோடியை வன்மையாக விமர்சித்தார்.

வருணையும்,அவரின் வெறிகொண்ட பேச்சை விவரித்து அபு கைசேர் கண்டித்தார்.மோடியையும்,வருணையும் அவர்கள் பீகாருக்குள் நுழைவதிலிருந்து நிதிஷ் குமார் தடுக்கவில்லையென்றால்,வரும் தேர்தலில் முஸ்லீம்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள் என்றும் கைசேர் மிரட்டல் விடுத்தார்.
source:Two Circles.net


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மோடியின் வருகையை எதிர்த்து பீகார் முஸ்லீம்கள் கருப்பு கோடி ஏந்தி போராட்டம்"

கருத்துரையிடுக