அஹ்மதாபாத்:கடந்த 2002ல் நடந்த அக்க்ஷர்தாம் தாக்குதலில் குற்றவாளிகள் என்று சந்தேகித்து,தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 நபர்களின் மேல் முறையீட்டு மனுவில்,குஜராத் உயர் நீதி மன்றம் இன்று முக்கிய தீர்ப்பு வழங்க உள்ளது.
கடந்த ஜூலை 1 2006ல் ஸ்பெஷல் பொடா நீதிமன்ற நீதிபதி சோனியா கோகாணி அளித்திருந்த தீர்ப்பில் ஆதம் அஜ்மீர்,ஷான் மியா பேரள்வி மற்றும் முப்தி அப்துல் கைய்யும் ஆகியோருக்கு இவ்வழக்கில் தூக்குத்தண்டனை விதித்தது.
மேலும் முஹம்மத் சலீம் ஷேய்க் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், அப்துல் மியா காதிரிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அல்தாப் ஹுசைன் என்பவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இவர்கள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த அர்.என்.தொஷித் மற்றும் கே.எம்.தாக்கர் அடங்கிய நீதிபதிகள் பென்ச், இவ்வழக்கின் முந்தைய தீர்ப்பில் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
இவ்வழக்குகளின் இருதரப்பு வாதங்கள் கடந்த 2008 ஏப்ரல் மாதமே முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பெரும்பாலானோர் முக்கியமான உலமாக்கள் ஆவர்.
source:Siasat

0 கருத்துகள்: on "அக்க்ஷர்தாம் தாக்குதல்:மேல் முறையீட்டு மனு மீது இன்று குஜராத் உயர்நீதி மன்றம் தீர்ப்பு"
கருத்துரையிடுக