22 ஜூன், 2010

சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் இரண்டு ஆய்வாளர்கள் ஈரானுக்குள் நுழைய தடை

டெஹ்ரான்:ஈரானின் அணுசக்தி திட்டங்களைப் பற்றி தவறான அறிக்கையை அளித்ததற்காக ஈரானுக்குள் நுழைய சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் இரண்டு ஆய்வாளர்களுக்கு ஈரான் தடை விதித்துள்ளது.

இதனை ஈரான் அணுசக்தி துறையின் தலைவர் தலைவர் அலி அக்பர் சலேஹி தெரிவித்தார்.

"கடந்த திங்கள் கிழமை அந்த இரு ஆய்வாளர்களும் அலுவலக ஒப்புதல் பெறாமல் ஈரானின் அணுசக்தி திட்டங்களைப் பற்றிய தவறான செய்தி அறிக்கையை சர்வதேச அணுசக்தி ஏஜன்சிக்கு அளித்தால் அவர்கள் ஈரானுக்குள் நுழைய தடை விதிக்கப் பட்டுள்ளது." என்றும் சலேஹி கூறினார்.

"அலுவலக ஓப்புதல் பெறாமல் சமர்பிக்கப்பட்ட அந்த அறிக்கை தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானதும் ஆகும்" என்றும் அவர் தெரிவித்தார்.

ஈரான் குறிப்பிட்ட அந்த இரண்டு ஆய்வாளர்கள் தவிர வேறு இரண்டு ஆய்வாளர்களை ஈரானின் அணுசக்தி திட்டங்களைப் பார்வையிட சர்வதேச அணுசக்தி ஏஜன்சியிடம் ஈரான் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் "சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் கவர்னர்களின் போர்டு மீட்டிங்கின் கடைசி பகுதியில் அந்த இரு ஆய்வாளர்களும் அளித்த தவறான அறிக்கைக்கு நாங்கள் எதிர்த்து குரல் கொடுத்துள்ளோம். அந்த அறிக்கை முற்றிலும் தவறானது" என அவர் கூறினார்.

சலேஹி மேலும் கூறுகையில் "ஈரானுக்கு அணு சக்தி ஆக்கப் பூர்வமான பணிகளுக்கு தேவையாக உள்ளது" என வலியுறுத்தினார்.

மேலும் "டெஹ்ரான் சட்ட வரையரையின் உரிமைகளுக்கு அப்பால் எதையும் கேட்காது ஆனால் அதன் உரிமையையும் விட்டுக் கொடுக்காது.' என்றும் கூறினார்.

"ஈரானுக்கும் சர்வதேச அணுசக்தி ஏஜன்சிக்கும் இடையேயான அணுசக்தி பாதுகாப்பு ஒப்பந்தத்தின் படி சரியான முறையில் ஆய்வுகள் மேற்க்கொள்ளலாம்" என்றும் அவர் வலியுறுத்தினார்.
pressTV

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் இரண்டு ஆய்வாளர்கள் ஈரானுக்குள் நுழைய தடை"

கருத்துரையிடுக