28 ஜூன், 2010

உலகின் மிகப்பெரிய நீச்சல் குளத்துடன் கூடிய ஹோட்டல்

உலகிலேயே மிக அதிக செலவில் கட்டப்பட்ட ஹோட்டல் வரிசையில் தற்போது இடம்பிடித்திருப்பது சிங்கப்பூரில் அமைந்துள்ள இந்த மரினா பே ஹோட்டல் ஆகும். சில தினங்களுக்கு முன்னர் இந்த ஹோட்டல் திறந்துவைக்கப்பட்டது. 55 மாடிகள் கொண்ட இந்த ஹோட்டலில் சுமார் 2,500 அறைகளைக் கொண்டுள்ளது. அறை ஒன்றின் கட்டணமாக சுமார் 350 ஸ்டேலிங் பவுண்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹோட்டலின் 650 அடி உயரத்தில் அமைந்துள்ள நீச்சல் குளமே பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது

இந்த நீச்சல் குளம், ஒலிம்பிக் நீச்சல் குளத்தை விட 3 மடங்கு பெரியதாகும். உலகிலேயே கட்டிடத்திற்கு மேல், இவ்வாறான பெரிய நீச்சல் குளம் கட்டப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.

சுமார் 70,000 பார்வையாளர்கள் இந்த ஹோட்டலை தினமும் பார்வையிட்டுச் செல்வதாகவும் கூறப்படுகிறது. சுமார் 4 பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல், ஆண்டுக்கு சுமார் 40 மில்லியன் டாலர்களை சம்பாதிக்கும் என அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.



Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "உலகின் மிகப்பெரிய நீச்சல் குளத்துடன் கூடிய ஹோட்டல்"

கருத்துரையிடுக