13 ஜூன், 2010

தடம் மாறும் தஞ்சை காவல்துறை -SDPI கண்டன ஆர்பாட்டம்

தஞ்சை மாவட்டம் முஸ்லிம்கள் பெருமளவு வசிக்கும் தமிழக மாவட்டங்களில் முதன்மையான மாவட்டம் ஆகும்.

தஞ்சை மாவட்டம் இதுவரை மத மோதல்கள் இல்லாத அமைதியான மாவட்டமாகவே உள்ளது இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் தங்களது பங்களிப்பை சரியாக செய்து வருகிறார்கள் தொழில்துறையில்,வியாபார கேந்திரங்களில் முஸ்லிம்கள் வியக்கத்தக்க மாற்றங்களை இந்த மாவட்டத்தில் செய்து வருகின்றனர்.
அரசியல் மற்றும் சமூக இயக்கங்களிலும் இம்மாவட்ட மக்களது பங்களிப்பு மிக முக்கியமானது ஆகும்.

இந்த மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக செந்தில்வேலன் என்ற அதிகாரி உள்ளார் இவரின் முஸ்லிம் விரோதபோக்கு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.பல வருடங்களாக நடந்து வரும் டிசம்பர் ஆறு பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்திற்கு எல்லா முஸ்லிம் அமைப்புகளுக்கும் கண்டன பேரணிக்கு அனுமதி மறுத்தது.

சுதந்திர தின அணிவகுப்பு நடத்த அனுமதி மறுத்து அதை ஒட்டி பல பொய் வழக்குகள் போட்டது பின்னர் திடலுக்குள் மட்டும் நடத்தி கொள்ள அனுமதித்தது.

ஆரோக்கியமான சமுகத்தை கட்டி எழுப்ப நோட்டிஸ் விநியோகித்த பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பினரை கைது செய்தது SDPI யின் துவக்க விழா பேரணிக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது.

அதிராம்பட்டினம் பள்ளிவாசல் சுற்று சுவர் இடிப்பில் இரண்டாம் பட்சமாக முஸ்லிம்களை நடத்தியது தமிழக அளவில் மின்வெட்டை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடந்தபோது கும்பகோணத்தில் மட்டும் அதற்கு அனுமதி மறுத்து கைது செய்தது.

மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ராஜகிரியில் தினமும் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக அறிவிக்கபடாத மின் வெட்டை கண்டித்து ஜமாஅத்தார்கள் நடத்திய மறியலில் 276 நபர்கள் மீது பொய் வழக்கு போட்டது.

SDPI யின் மாவட்ட தலைவர் பாரூக் மீது பொய் வழக்கு போட்டது என பட்டியல் நீள்கிறது

இதை கண்டித்து சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா கும்பகோணம் மீன் மார்க்கெட்டில் கண்டன ஆர்பாட்டம் கடந்த 11ந்தேதி மாலை 5.30 மணிக்கு நடத்தியது.

மாநில தலைவர் அப்துல் சத்தார் தலைமை தங்கினார்மதுரை மாவட்ட செயலாளர் கே எஸ் முஹம்மது இப்ராகிம்பாப்புலர் ஃபிரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக் மற்றும் தஞ்சை மாவட்ட தலைவர் முஹம்மது பாரூக் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். முடிவில் மாவட்ட செயலாளர் தாஜுதீன் நன்றிகூறிய இந்த ஆர்பாட்டத்தில் சுமார் அறுநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தடம் மாறும் தஞ்சை காவல்துறை -SDPI கண்டன ஆர்பாட்டம்"

கருத்துரையிடுக