7 ஜூலை, 2010

இந்தியா முழுவதும் 1.33 லட்சம் விசாரணைக் கைதிகள் விடுதலை

புதுடெல்லி:நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களில் 1.33 லட்சம் விசாரணைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து விசாரணைக் கைதிகளுக்கு ஜாமீன் வழங்குவது அல்லது அவர்களை விடுதலை செய்யும் திட்டம் கடந்த குடியரசு தினத்தில் தொடங்கப்பட்டது.

அதன்படி ஜனவரி 26 முதல் ஜூன் 30 வரை, ஒரு லட்சத்து 33 ஆயிரம் விசாரணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இத்திட்டம் ஜூலை 31 வரை அமலில் இருக்கும் என்று மத்திய சட்ட அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிகபட்சமாக 39,406 விசாரணைக் கைதிகளை விடுதலை செய்துள்ளது. ஒரிசாவில் 13,664 பேரும், ஆந்திராவில் 13,298 பேரும், டெல்லியில் 8,701 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளன.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இந்தியா முழுவதும் 1.33 லட்சம் விசாரணைக் கைதிகள் விடுதலை"

கருத்துரையிடுக