ஆப்கானிஸ்தானில் தலிபான்களை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா தலைமையில் நேட்டோ படைகள் முகாமிட்டு உள்ளன.
அவர்கள் கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள காஸ்னி பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அதே பகுதியில் ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது நேட்டோ படையினர் ஆஃப்கன் படையினர் மீது விமானத்தில் சென்று குண்டு வீசி தாக்குதல் நடத்தினார்கள்.
இதில் ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் 5 பேர் பலியானார்கள். 7 பேர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து நேட்டோ 'தாங்கள் அவர்களை தீவிரவாதிகள் என்று நினைத்து தாக்கியதாக' தெரிவித்துள்ளது.
நேட்டோ படைகள் இதேபோல் ஏற்கனவே பலமுறை தவறுதலாக தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு துறை கண்டனம் தெரிவித்து உள்ளது. ஆப்கானிஸ்தான்- நேட்டோ கூட்டு விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளது.

0 கருத்துகள்: on "ஆஃப்கன் படை மீது நேட்டோ விமானப் படை தாக்குதல்- 5 வீரர்கள் பலி"
கருத்துரையிடுக