கோவையில் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்திய காவலர்களை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பினர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அக்கூட்டமைப்பின் தலைவர் பரமசிவம் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக தமிழக காவல்துறையினர் வழக்கறிஞர்கள் மீது பொய் வழக்கு போடுவதோடு, நேரிடையாக வழக்கறிஞர்களை தாக்க ஆரம்பித்து விட்டதாகவும் அவர் குற்றம்சாற்றினார்.
கோவையில் சில நாட்களுக்கு முன்பு கலையரசன் என்ற வழக்கறிஞரை காவல்துறையினர் கடுமையாக தாக்கி உள்ளார்கள் என்றும் இதேபோன்று மதுரை, திருச்சி, தர்மபுரி, திண்டுக்கல், நாகர்கோவில், சேலம் ஆகிய இடங்களில் வழக்கறிஞர்களை காவல்துறையினர் தாக்கி இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இன்னும் வழக்கறிஞர்களை தாக்கிய காவல்துறையினர் கைது செய்யவில்லை என்று தெரிவித்த பரமசிவம், தமிழக காவல்துறையினரின் இந்த அராஜக போக்கை கண்டித்தும், வழக்கறிஞர்களை தாக்கியவர்களை கைது செய்யக் கோரியும், வழக்கறிஞர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்ப பெறக் கோரியும் தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெறுகிறது என்றார்.
இந்த நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் பரமசிவம் தெரிவித்தார்.

0 கருத்துகள்: on "காவல்துறையை கண்டித்து 70 ஆயிரம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்"
கருத்துரையிடுக