27 ஜூலை, 2010

சுகாதார அமைச்சகத்தின் இரண்டுவருட நொறுக்குத் தீனி செலவு ரூ.94 லட்சம்

டெல்லி,ஜுலை27:மத்திய அமைச்சகம் ஒவ்வொன்றும் நொறுக்குத் தீனி மற்றும் குளிர்பானங்களுக்கு எவ்வளவு செலவிடுகின்றன என்ற தகவல் தருமாறு ரமேஷ்வர்மா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார்.

அதன் பேரில் கடந்த 2 ஆண்டுகளில் நொறுக்குத் தீனிக்கு எவ்வளவு செலவிடப்பட்டன என்ற விபரத்தை மத்திய அமைச்சகங்கள் வெளியிட்டன.

நொறுக்குத் தீனி சாப்பிடும் விஷயத்தில் சுகாதார அமைச்சகம் முதல் இடத்தில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் அந்த அமைச்சகம் 94 லட்சத்து 7 ஆயிரம் ரூபாயை இதற்காக செலவிட்டுள்ளது.

பிரதமர் அலுவலகம் கடந்த 2 ஆண்டுகளில் பாட்டில் தண்ணீர், குளிர்பானம் உள்ளிட்டவைகளுக்கு ரூ.11 லட்சத்து 77 ஆயிரம் செலவிட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் செய்துள்ள நொறுக்குத் தீனி செலவுடன் ஒப்பிடுகையில் சுகாதார அமைச்சகம் 8 மடங்கு அதிகமாக செலவிட்டுள்ளது.

2008-09ல் ரூ.49 லட்சத்து 45 ஆயிரமும், 2009-10ல் ரூ.44 லட்சத்து 62 ஆயிரமும் சுகாதார அமைச்சகம் செலவிட்டுள்ளது.

ஊரக மேம்பாடு அமைச்சகம் ரூ.41.42 லட்சம், நீர்ப்பாசன அமைச்சகம் ரூ.20.93 லட்சமும் நொறுக்குத் தீனிக்கு செலவிட்டுள்ளது. பெட்ரோலியம் அமைச்சகம் ரூ.19.5 லட்சம் செலவிட்டுள்ளது.

உணவு மற்றும் பொது வினியோகத்துறை ரூ.35 ஆயிரம் ரூபாயை நொறுக்கு தீனி மற்றும் குளிர் பானங்களுக்கு செலவு செய்துள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சுகாதார அமைச்சகத்தின் இரண்டுவருட நொறுக்குத் தீனி செலவு ரூ.94 லட்சம்"

கருத்துரையிடுக