ஸ்ரீநகர்:அப்பாவி இளைஞர்களை தீவிரவாதிகள் என சுட்டுக்கொல்வதையும் இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தும் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை சுட்டுக்கொல்வதையும் தங்கள் பொழுதுபோக்காக கொண்டுள்ளன கஷ்மீர் போலீஸ் மற்றும் சிஆர்பிஎஃப் படை.
ஜூன் 11 க்குப் பிறகு பாதுகாப்பு படையினரால் 14 அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
மந்திரியின் வருகையை எதிர்த்தவர்களை சிஆர்பிஎஃப் படையினர் துரத்திச் சென்றபோது முஜாஃபர் அஹமத் பட் (17) ஓடையில் தள்ளப்பட்டு இறந்ததே செவ்வாய் வன்முறைக்கு காரணம்.
முஜாஃபரின் இறுதி சடங்கில் ஏற்பட்ட அடக்குமுறையின் போது போலீஸ் சுட்டதில் ஃபயாஸ் அஹ்மத் வானி(30) கழுத்தில் குண்டு பாய்ந்து இறந்தார்.
இந்த ஆர்ப்பாட்டங்களில் பெண்கள் அரசையும் பாதுகாப்பு படையையும் எதிர்த்து கோஷங்கள் போட்டுச் சென்றனர்.அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஃபான்சி ஜான் (25) இறந்தார்.
இதையடுத்து கொதித்தெழுந்த கஷ்மீர் மக்கள் மத்திய படைகளை எதிர்த்து பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அஃப்ரார் அஹ்மத் (14) என்ற சிறுவன் கொல்லப்பட்டான்.
இதையடுத்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஸ்ரீநகரில் பதட்டம் நிலவுகிறது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
CRPF படையினர் பத்திரிக்கையாளர்களின் மீதும் தடியடி நடத்தினர். தவுசீஃப் முஸ்தபா மற்றும் ஃபாரூக் ஜாவித் கான் ஆகியோர் கடுமையான முறையில் தாக்கப்பட்டனர். பிரிவினைவாத தலைவர் மிர்வாய்ஸ் உமர் ஃபாருக் இந்த மனித உரிமை மீறலுக்கு எதிராக தனது ஆதரவாளர்களை அமைதியாக போராடும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

0 கருத்துகள்: on "கஷ்மீரில் அப்பாவிகளை சுட்டுக்கொல்வதை பொழுதுபோக்காக கொண்ட மத்திய படைகள்"
கருத்துரையிடுக