
கடந்த வாரம் புதன்கிழமையன்று ராய்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு, அமெரிக்காவின் பொதுமக்கள், அதிபர் ஒபாமா பொருளாதாரத்தை கையாளும் விதத்தினை ஏற்றுக்கொள்ளாத தன்மை அதிகரித்து வருவதாக காட்டுகிறது.
ராய்டர்ஸும்(Reuters),இப்போசும்(Ipsos) இணைந்து நடத்திய இந்தக் கருத்துக்கணிப்பின் படி ஒபாமா பொருளாதாரத்தை மேலாண்மை செய்வதில் வீழ்ச்சி மிகுந்த வேகத்தில் அடைந்து வருவதாக அமெரிக்கர்கள் நம்புகின்றார்கள்.
ஆஃப்கானிலும்,ஈராக்கிலும் நடைபெற்று வரும் போர்களை ஏற்றுக்கொள்வதிலும் ஒபாமா விழ்ச்சி அடைந்து வருவதாக தெரிகிறது.
ஒபாமா,வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பொருளாதார வீழ்ச்சியினைக் கையாளும் தன்மை ஆகியவைகள் மற்ற விசயங்களைக் காட்டிலும் வீழ்ச்சி அடைந்து வருவதாக அந்தக் கருத்துக்கணிப்பு காட்டுகிறது.
வெறும் 34 சதவீத மக்களே ஒபாமா பொருளாதாரத்தை மேலான்மை செய்யும் விதத்தினை நம்புவதாக ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும் 46 சதவீத மக்கள் வேலையில்லாதத் திண்டாட்டத்தை கையாள்வதில் திருப்தி இல்லை என்று கருத்து கூறியுள்ளனர்.
2009ன் ஆரம்பத்தில்,பாதிக்கும் மேற்ப்பட்ட அமெரிக்க பொதுமக்கள் வீழ்ந்துவரும் பொருளாதாரத்தை ஒபாமா நன்முறையில் கையாள்கிறார் என்று கருத்துக்கள் கூறியிருந்த நிலையில் தற்பொழுது எடுத்துள்ள கருத்துக்கணிப்பின் படி பொருளாதாரத்தை மேலான்மை செய்வதில் ஒபாமா சரியில்லை என்ற கருத்து ஓங்கி வருகிறது.
ஒபாமாவும் டெமாக்ரடிஸ்களும் வேலைகளை உருவாக்குவதில் முனைப்பு காட்டுவதை விட தங்களது ஆற்றல் சக்திகளையெல்லாம் உடல் நலத்திட்டங்களுக்கும் (அரசு சாரா நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதிலும்) பொருளாதார நெறிமுறைகளை வகுப்பதற்குமே செலவிடுவதாக பொதுமக்களின் வருத்தங்கள் காட்டுகிறது. (இந்த இரண்டு துறையுமே கார்பரேட் லாபிக்களை வலுப்படுத்த உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தான் டெமாக்ரடிஸ்களுக்கு தேர்தலில் செலவு செய்ய பெரும் பணத்தை முத்லீடு செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.)
ஆக மொத்தத்தில் ஜுலை 22 முதல் 25 வரை, 1075 இளைஞர்களிடம் நடத்திய நாடு தழுவிய கருத்துக்கணிப்பின் படி 48 சதவீத மக்களே ஒபாமாவிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர். இது கடந்த ஜூன் மாதம் நடத்திய கருத்துக்கணிப்பின் படி 50 சதவீத ஒப்புதலை விடக்குறைவாகும்.
கடந்த மாதத்தின் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றிய அறிக்கையும், தொழிற்சாலைகளுக்கு கிடைக்கும் ஒப்பந்தங்கள் பற்றிய அறிக்கையும் பொருளாதாரத்தை மறுபடியும் பாதித்து உள்ளது.
இந்த வருட இறுதியில் வாங்கிய கடனைத் திரும்ப செலுத்த இயலாத 10 இலட்சத்திற்கும் மேலான வழக்குகள் வருவது அமெரிக்கப் பொருளாதாரத்தை இன்னும் மோசமான நிலைக்கு இட்டுச் செல்லும். (வாழ்க அமெரிக்கா!)
1 கருத்துகள்: on "வீழ்ச்சியை நோக்கி ஒபாமாவின் புகழ்!"
முன்பு ஒரு முறை இது போன்று ஓபாமாவின் புகழ் குறைந்த பொழுது ஆஸ்கரில் ஹர்ட் லாக்க்ர் படம் வெளிவந்தது. இப்பொழுது என்ன நடக்குமோ?
கருத்துரையிடுக