முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறுகளையும்,காவல்துறையோ, உளவுத்துறையோ வெளியிடும் புதிய பெயர் தெரியாத இயக்கங்களோடு செய்திகளை புணைந்து மேலும் அச்செய்திக்கு வலுசேர்க்கும் வகையில் கட்டுக்கதைகளையும் வெளியிடும் ஊடகங்களுக்கு,சமீப காலங்களில் இந்தியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளின் விசாரணைகள் தெரியாமல் போயினவோ! என்னவோ?
குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடன் வழக்கமாக அறிவிக்கும் லஷ்கர்-இ-தொய்பா, ஹர்கத்-உல்-ஜிகாத், இந்திய முஜாஹிதீன்கள், சிமி ஆதரவு தீவிரவாதிகள் ஆகியவற்றோடு சேர்த்து அச்சமயத்தில் கைது செய்யப்படும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களையும் வரிந்து கட்டி செய்திகளையும், கட்டுக்கதைகளையும் மற்றும் அவதூறுகளையும் பக்கத்திற்க்கு பக்கம், நொடிக்கு நொடி வெளியிடும் ஊடகங்களுக்கு இக்குண்டுவெடிப்பு பற்றிய சமீபத்திய விசாரணகளும், கைதுகளும் தெரியாமல் போனது ஏனோ?
இதில் வேடிக்கை என்னவென்றால் இக்குண்டுவெடிப்பில் பலியாவதும், கைது செய்யப்படுவதும், விசாரணை என்ற பெயரில் பல ஆண்டுகள் சிறையில் அடைத்து சித்திரவதை செய்து பின்னர் நிரபராதி என விடுதலை செய்யப்படுவதும் முஸ்லிம்களே என்பது வாடிக்கையாகி வருகிறது.
அவ்வாறு சமீபத்தில் நடைபெற்ற ஹிந்துத்துவத்தின் பயங்கரவாத செயல்களையும், சமீபத்திய சி.பி.ஐ., ஏ.டி.எஸ்.ன் விசாரணைகளையும் இங்கு காண்போம்.குண்டுவெடிப்பு நிகழ்ந்தவுடன் வழக்கமாக அறிவிக்கும் லஷ்கர்-இ-தொய்பா, ஹர்கத்-உல்-ஜிகாத், இந்திய முஜாஹிதீன்கள், சிமி ஆதரவு தீவிரவாதிகள் ஆகியவற்றோடு சேர்த்து அச்சமயத்தில் கைது செய்யப்படும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களையும் வரிந்து கட்டி செய்திகளையும், கட்டுக்கதைகளையும் மற்றும் அவதூறுகளையும் பக்கத்திற்க்கு பக்கம், நொடிக்கு நொடி வெளியிடும் ஊடகங்களுக்கு இக்குண்டுவெடிப்பு பற்றிய சமீபத்திய விசாரணகளும், கைதுகளும் தெரியாமல் போனது ஏனோ?
இதில் வேடிக்கை என்னவென்றால் இக்குண்டுவெடிப்பில் பலியாவதும், கைது செய்யப்படுவதும், விசாரணை என்ற பெயரில் பல ஆண்டுகள் சிறையில் அடைத்து சித்திரவதை செய்து பின்னர் நிரபராதி என விடுதலை செய்யப்படுவதும் முஸ்லிம்களே என்பது வாடிக்கையாகி வருகிறது.
மாலேகான் குண்டுவெடிப்பு-1 Sep 8 2006 - 37 முஸ்லிம்கள் பலி
கைது செய்யப்பட்டவர்கள் - சல்மான் பார்சி, பாருக் இக்பால், ரயீஸ் அஹமத், நூருல் ஹுதா, ஷபீர்
ஏ.டி.எஸ். விசாரணையில் உண்மை குற்றவாளிகள் - ஹிந்துத்துவ தீவிரவாதிகள்
சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு Feb 18 2007 - 68 பேர் பலி, அதிகமானோர் பாகிஸ்தானியர்
குற்றம் சுமத்தப்பட்டது - லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ் முஹம்மத்
சி.பி.ஐ. விசாரணையில் உண்மை குற்றவாளிகள் – ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள்
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு May 18 2007 - 14 முஸ்லிம்கள் பலி
கைது செய்யப்பட்டவர்கள் - 25 முஸ்லிம்கள் குற்றவாளிகளாக. 80 முஸ்லிம்கள் சந்தேகத்தின் அடிப்படையில்.
சி.பி.ஐ. விசாரணையில் உண்மை குற்றவாளிகள்- ஹிந்துத்துவ தீவிரவாதிகளான சந்தீப் டாங்கே, ராம்சந்திர கல்சங்கரா, லோகேஷ் சர்மா
அஜ்மீர் குண்டுவெடிப்பு
Oct 11 2007 - 3 முஸ்லிம்கள் பலி
குற்றம் சுமத்தப்பட்டது - லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ் முஹம்மத்
சி.பி.ஐ., ஏ.டி.எஸ். விசாரணைகளில் உண்மை குற்றவாளிகள் - ஹிந்துத்துவ தீவிரவாதிகளான தேவேந்திர குப்தா, சந்திரசேகர், பிரசாத், அனில் ஜோஷி.
தானே சினிமா குண்டுவெடிப்பு
Jun 4 2008
ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கங்களான ஹிந்து ஐங்காகிருதி சமீதி, சனாதன் சன்ஸ்தா. ‘ஜோதா அக்பர்’ என்ற முஸ்லிம் சம்பந்தப்பட்ட ஹிந்திப் படத்தை எதிர்த்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு.
கான்பூர்,நந்தித் குண்டுவெடிப்பு முயற்சிகள்
Aug 2008
இரு இடங்களிலும் குண்டு தயாரிக்கும் சமயத்தில் வெடித்து 4 ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் பலி
மாலேகான் குண்டுவெடிப்பு-2
குற்றம் சுமத்தப்பட்டது - இந்திய முஜாஹிதீன்கள்
ஏ.டி.எஸ். விசாரணையில் உண்மை குற்றவாளிகள் - அபினவ் பாரத் மற்றும் ராஷ்ட்ரிய ஜாக்ரன் மன்ச் ஆகிய ஹிந்துத்துவ தீவிரவாதிகள்
கோவா குண்டுவெடிப்பு
Oct 16 2009
குண்டு வைக்கும் முயற்சியில் சனாதன் சன்ஸ்தா என்ற ஹிந்துத்துவ தீவிரவாதிகள் 2 பேர் பலி
தமிழ்நாட்டில் தென்காசி குண்டுவெடிப்பு
இதுபோன்று பல பயங்கரவாத சம்பவங்களை அடுக்கி கொண்டே போகலாம்.
இவை அனைத்தும் அதிகரித்து வரும் ஹிந்துத்துவ தீவிரவாதத்தையே காட்டுகின்றன.
ஊடகங்கள் தங்கள் பத்திரிகை தர்மத்தை கடைபிடித்து உண்மையான, நேர்மையான செய்திகளை வெளியிட வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மேல் அநியாயமாக பழி போடுவதும், தொடர்ந்து பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதும் அந்த சமுதாயத்தை மட்டும் பாதிக்கப்போவதில்லை.மாறாக அது ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியையும் பாதிக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இவை அனைத்தும் அதிகரித்து வரும் ஹிந்துத்துவ தீவிரவாதத்தையே காட்டுகின்றன.
ஊடகங்கள் தங்கள் பத்திரிகை தர்மத்தை கடைபிடித்து உண்மையான, நேர்மையான செய்திகளை வெளியிட வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் மேல் அநியாயமாக பழி போடுவதும், தொடர்ந்து பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதும் அந்த சமுதாயத்தை மட்டும் பாதிக்கப்போவதில்லை.மாறாக அது ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியையும் பாதிக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
1 கருத்துகள்: on "ஊடகங்கள் மறைத்த குண்டுவெடிப்பு விசாரணைகள்"
No action can politically be taken against the leaders simply because the criminals happen to be big guns. The Investigation on modern Indias worst massacre (Gujarat) in which over 2300 innocent Muslims who had nothing whatsoever with the Sabarmati attack, will eventually end up the same way as Babri Masjid case.
We have to wait at least 17 years and by the time many criminals including Modi will have disappeared from the main stage of Indian politics.
Justice delayed is justice denied. A powerful Govt should deal with any terrorist and communal crimes, REGARDLESS OF RELIGION of the perpetrators and introduce collective punishment on the organisation or party that initiated the demolition, crimes. Even the SC is impotent in India in protecting the minorities and punishing the real terrorists
கருத்துரையிடுக