23 ஜூலை, 2010

ஈராக் மீதான போர் சட்டவிரோதமானது: இங்கிலாந்து துணை பிரதமர் க்ளெக்

லண்டன்,ஜூலை.22: பிரிட்டனின் துணை பிரதமர் நிக் க்ளெக்,ஈராக் மீதான ஆக்கிரமிப்பு சட்டவிரோதமானது,இது கூட்டணி அரசின் கொள்கைகளை தடுமாற செய்துள்ளது என்று கூறியுள்ளார்.

க்ளெக்கின் விமர்சனம் பழமைவாத எம்.பிக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் டேவிட் கேமரூன் உள்பட பலரும் 2003 படையெடுப்புக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அமெரிக்க பயணம் சென்றிருக்கும் கேமரூனுக்கு பிரதிநிதியாக லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவர் பாராளுமன்றத்தில் பேசினார்.முன்னால் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாக் ஸ்ட்ராவுக்கும் இவருக்கும் மோதல் ஏற்பட்டவுடன்,ஸ்ட்ராவைப் பற்றி கூறுகையில் "அவருடைய வாழ்க்கை வரலாறு வருகையில், மிகவும் பேரழிவு முடிவான - ஈராக் மீதான சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு அவரின் பங்கை அவர் விவரித்துகூற நேரிடும்" என்றார்.

சதாம் ஹுசேனை வீழ்த்தும் முடிவுக்கு லிபரல் ஜனநாயக கட்சி மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தது. சமாதான முயற்சியில், க்ளெக் தனிப்பட்ட முறையிலேயே பேச அனுமதிக்கப்பட்டார்,

சர் ஜான் சில்கோட் தலைமையிலான ஈராக் விசாரணை குழு,மார்ச் 2003 படையெடுப்பு சட்டப்பூர்வமானதா என்பதை அறிவிக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு, "45,000 பிரிட்டிஷ் வீரர்களைக் கொண்ட அமெரிக்க தலைமையிலான படையெடுப்பு சட்டப்பூர்வமானதா என்று சர் ஜான் குழுவால் முடிவுகூற இயலாது" என்று செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஈராக் மீதான போர் சட்டவிரோதமானது: இங்கிலாந்து துணை பிரதமர் க்ளெக்"

கருத்துரையிடுக