
ஏஏடி ஏவுகணை கடந்த 2006-ம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ந்தேதி முதன் முதலாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. 2007 மற்றும் 2009-ம் ஆண்டுகளிலும் ஏஏடி ஏவுகணை சோதித்து பார்க்கப்பட்டது.
ஏஏடி ஏவுகணையின் துல்லியமான தாக்கும் திறனை அறிய மீண்டும, ஒரு தடவை அதை சோதித்துப்பார்க்க ராணுவ உயர் அதிகாரிகள் திட்டமிட்டனர். கடந்த மார்ச் மாதமே இந்த சோதனைக்கு திட்டமிடப்பட்டது.பல்வேறு காரணங்களால் அது தள்ளிப் போடப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று ஏஏடி ஏவுகணை நேற்று காலை 10.05 மணிக்கு சோதித்து பார்க்கப்பட்டது.முதலில் சந்திப்பூர் கடல் பகுதியில் இருந்து ப்ரிதிவி ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது.
சந்திப்பூரில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் சக்கரவாகனத்தில் ஏஏடி ஏவுகணை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ப்ரிதிவி ஏவுகணை பாய்ந்து வருவதை சில நிமிடங்களுக்குள் தன் ராடாரில் கண்டு ஏஏடி ஏவுகணை தாக்குதலுக்கு பறந்ததுதிட்டமிட்டபடி குறிப்பிட்ட இடத்தில் ப்ரிதிவி ஏவுகணையை வழிமறித்து தாக்கி அழித்தது.
இதன் மூலம் இன்று நடந்த எவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. ஏஏடி அதிநவீன ஏவுகணை மிகத்துல்லியமாக தாக்குதல் நடவடிக்கையை நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏஏடி அதிநவீன ஏவுகணைகள் தலா 7 மீட்டர் உயரம் கொண்டவை. இதனுள் உயர்தர கம்ப்யூட்டர் இடம் பெற்றிருக்கும்.தரையில் உள்ள ராடார்கள் பிறப்பிக்கும் கட்டளைக்கு ஏற்ப ஏஏடி ஏவுகணைகள் செயல்படும். இன்று நடந்த ஏவுகணை சோதனைக்காக சந்திப்பூரில் உள்ள ஏவுதளம் அருகே வசித்து வந்த சுமார் 400 குடும்பத்தினரை பாதுகாப்புக்காக வேறு இடத்திற்கு மாற்றி இருந்தனர்.
0 கருத்துகள்: on "இந்திய தொழில்நுட்பத்தில் தயாரான இடைமறித்து தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணை சோதனை வெற்றி"
கருத்துரையிடுக