28 ஜூலை, 2010

மேட்டுப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகி லாரி மோதி மரணம்

கோவை,ஜுலை28:மேட்டுப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகி முஹம்மது மீரான்(27), நேற்று இரவு 11:40 மணியளவில் லாரி ஒன்று மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்).

இவர் கடந்த பல வருடங்களாக சமுதாய பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வந்தார்.

சம்பவ தினத்தன்று அடிக்கடி விபத்து ஏற்படக்கூடிய வளைவான குறுகிய சாலையில் குழுமியிருந்த மக்கள் கூட்டத்தை விபத்துகள் ஏற்படாவண்ணம் சீராக்கிக்கொண்டிருந்தார். அச்சமயம் வளைவில் வேகமாக வந்த லாரி இவர் மேல் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அங்கிருந்தவர்கள் கூறினர்.

இறக்கும் பொழுதும் சமூகப்பணியினை மேற்கொண்டிருந்த இந்த சகோதரனின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து அவரது ஆத்மாவை பொருந்திக் கொள்வானாக!

அவருடன் அருகில் இருந்த மற்று மூன்று சகோதரர்களில் சுபைர் என்பவர் காலில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மேலும் இரண்டு சகோதரர்கள் லேசான காயகளுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வெளிவந்தனர்.
ஷஹீதான மீரான் அவர்களின் ஜனாஷா இந்திய நேரப்படி இன்று(28/7/2010) மதியம் 2:30 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

6 கருத்துகள்: on "மேட்டுப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகி லாரி மோதி மரணம்"

பெயரில்லா சொன்னது…

inna lillaahi va inna ilaihi raagiyoon

பெயரில்லா சொன்னது…

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

பெயரில்லா சொன்னது…

allah avarai porunthikkolvanaga

பெயரில்லா சொன்னது…

inna lillahi va inna ilaihi rajiyoon

Unknown சொன்னது…

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

கூத்தாநல்லூர் முஸ்லிம் சொன்னது…

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கருத்துரையிடுக