புதுடெல்லி:தங்களது சொந்த ஊரில் மக்கள் நல்வாழ்வு திட்டங்களை செயல்படுத்த நிதியுதவி செய்யும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்காக வெளிநாடு வாழ் இந்தியர்கள் எவ்வளவு பணம் அனுப்பி வைக்கிறார்களோ அந்த நிதி முழுமைக்கும் வரிச்சலுகை அளிக்கப்படும் என்று வெளிநாடு வாழ் இந்தியர்களின் நல்வாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் பணத்தைப் பெற்று அவர்களது சொந்த ஊரில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பள்ளிக்கூடமோ, மருத்துவமனையோ அல்லது வேறு ஏதாவது ஒரு வகையில் மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இருந்து நிதியைப் பெற்று திட்டத்தை செயல்படுத்துவதற்காக இந்திய மேம்பாட்டு பவுண்டேஷன் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. முதலில், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களிடம் இருந்து நிதியைப் பெறும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து பிரிட்டன் மற்றும் வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களிடம் இருந்தும் நிதியைப் பெறும் பணி தொடங்கும் என்று வெளிநாடு வாழ் இந்தியர்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார்.
இந்த வரிச்சலுகை திட்டம் தொடர்ந்து அமலில் இருக்காது. இன்னும் மூன்று மாதங்களுக்கு மட்டுமே இருக்கும் என்றும் அவர் கூறினார்.

0 கருத்துகள்: on "மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்கு உதவி செய்யும் என்.ஆர்.ஐ க்களின் உதவிகளுக்கு வரிச்சலுகை"
கருத்துரையிடுக