21 ஜூலை, 2010

பி.எஃப்.ஐ. சுதந்திர தின அணிவகுப்பிற்குத் தடை - ஆர்பாட்டங்கள் நடத்த எஸ்.டி.பி.ஐ. முடிவு

கொச்சி:இந்தியாவின் 63-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கேரளாவில் 7 இடங்களில் சுதந்திரதின அணிவகுப்பு நடத்தப்படும் என்று பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அறிவித்திருந்தது.

இந்நிலையில் கோட்டயம் மற்றும் பையனூர் ஆகிய இடங்களில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நடத்தவிருந்த சுதந்திர தின அணிவகுப்பிற்கு கேரள போலீசார் தடை விதித்துள்ளனர்.

ஆழுவா என்ற இடத்தில் நடத்தவிருந்த அணிவகுப்பிற்கு சென்றவருடமே போலீசார் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தடைகளை பி.எப்.ஐ. சட்ட ரீதியாக சந்திக்கவுள்ளது.

மேலும் இத்தடையை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ அரசியல் கட்சி நான்கு முக்கிய இடங்களில் ஆர்பாட்டங்கள் செய்யவும் முடிவெடுத்துள்ளது. இம்மாதம் 27 முதல் 31-ம் தேதி தேதி வரை,இத்தடைகளை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்களை நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

முன்னதாக,சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் வரும் என்பதாக கூறி கேரள போலீசார் தொடுத்த மனுவை நகர மாஜிஸ்திரேட் ஏற்றுக்கொண்டு அணிவகுப்பிற்கு தடைவிதித்தார்.

இது குறித்து பி.எப்.ஐ. பொதுச் செயலாளர் பி.அப்துல் ஹமீது தெரிவிக்கையில்; 'சுந்தந்திர தின அணிவகுப்பிற்கு தடை விதித்துள்ளதை சட்டப்படி சந்திப்போம்' என்றார்.

பல வருடங்களாக அமைதியான முறையில் நடந்து வரும் இந்த அணிவகுப்பிற்கு தடை விதித்துள்ளதை ஜனநாயகத்திற்கு புறம்பான செயல் என்று கூறியுள்ள அவர், இது தேசிய ஒருமைபாட்டிற்கும் எதிரானது என்றார்.

கர்நாடகாவிலும், தமிழகத்திலும் கடந்த இரு ஆண்டுகளாகவும், கேரளத்தில் 2004 லிருந்தும் பி.எப்.ஐ. சார்பில் சுதந்திர தின அணிவகுப்புகள் நடந்து வருகின்றன.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பி.எஃப்.ஐ. சுதந்திர தின அணிவகுப்பிற்குத் தடை - ஆர்பாட்டங்கள் நடத்த எஸ்.டி.பி.ஐ. முடிவு"

கருத்துரையிடுக