டெல்லி,ஜுலை26:முஸ்லிம்களின் இடஒதுக்கீடு விவகாரத்தில் நாடு முழுவதும் ஒரு மித்த கருத்து தேவை என்று பிரதமர் மன்மோகன் சிங் மீண்டும் கூறியுள்ளார்.ஜாமியத் உலமா-அல்-ஹிந்த் தாக்கல் செய்த கடிதத்திற்கு அதன் தலைவர் மவ்லானா காரி முஹம்மத் ஒஸ்மான் அவர்களுக்கு பதிலளித்துள்ள பிரதமர், சிறுபான்மையின சமூகத்தின் வளர்ச்சியிலும் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் இடஒதுக்கீடு விஷயத்தில் அனைத்து தரப்பினரின் ஒரு மித்த கருத்தை உருவாக்குவது மிகவும் அவசியம் என்று கூறியுள்ள பிரதமர், சிறுபான்மையினர் நலனுக்காக 2007ல் வெறும் ரூ.500 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்ட நிதி 2010-11 ஆண்டுகளில் சுமார் 2,600 கோடியாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: on "முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டிற்கு ஒருமித்த கருத்து தேவை - பிரதமர் மன்மோகன் சிங்"
கருத்துரையிடுக