27 ஜூலை, 2010

லண்டனில் முகத்திரை அணிந்த மாணவிகளுக்கு பேருந்தில் ஏற அனுமதி மறுப்பு

லண்டன்,ஜுலை27:22 வயது மதிக்கத்தக்க இரண்டு முஸ்லிம் மாணவிகளில் ஒருவர் முகத்திரை அணிந்த காரணத்திற்காக பேருந்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டது குறித்து விசாரணை செய்வதாக லண்டன் பேருந்து நிறுவனமான மெட்ரோலைன் கூறியுள்ளது.

இரண்டு மாணவிகளில் யாஸ்மின் என்ற மாணவி ஹிஜாப் அணிந்திருந்ததாகவும்,மற்றொருவர் அதூஃபா கண்கள் மட்டும் தெரியும்படி முகத்திரை அணிந்திருந்தனர்.

அவ்விரு மாணவிகளும் பேருந்தில் ஏற முற்படும்போது அப்பேருந்தின் ஓட்டுநர், "நான் உங்களை பேருந்தில் ஏற்ற முடியாது, நீங்கள் இருவரும் அச்சுறுத்தும்படி இருக்கிறீர்கள்" என்று கூறி பேருந்தில் ஏற்ற மறுத்துள்ளார்.

"நாங்கள் இந்த விவகாரத்தை அக்கறையுடன் எடுத்து விசாரித்து வருகிறோம். எங்களின் நிறுவன ஊழியர்கள் இவ்வாறு கூறியிருப்பார்கள் என்று எங்களுக்கு சந்தேகம் இல்லை, ஏனெனில் நாங்கள் சமத்துவம், வேற்றுமை எல்லோருக்கும் உண்டு என்பதை மதித்து உறுதி செய்திருக்கிறோம்." என்று மெட்ரோலைன் கூறியிருக்கிறது.

"இதுகுறித்து மூன்று ஓட்டுநர்களை விசாரித்து வருகிறோம், எங்கள் நிறுவன ஓட்டுநர் அனுமதி மறுத்திருந்தால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறியுள்ளது.

இச்சம்பவம் குறித்து பிரிட்டிஷ் முஸ்லிம் கவுன்சில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது, ஆனால் தனிநபர் வழக்கிற்காக கருத்து தெரிவிக்க முடியாது என்றும் கூறியுள்ளது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "லண்டனில் முகத்திரை அணிந்த மாணவிகளுக்கு பேருந்தில் ஏற அனுமதி மறுப்பு"

கருத்துரையிடுக