மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்துவது குறித்து இன்று நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படாததால், மீண்டும் கூடி விவாதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தியதை தொடர்ந்து, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.
வீரப்பமொய்லி,கபில்சிபல், பரூக்அப்துல்லா, ஜெய்பால் ரெட்டி, மம்தா பானர்ஜி ஆகிய அமைச்சர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் சாதி வாரி கணக்கெடுப்பு பற்றி முடிவு செய்வதற்காக, மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது.
பிரணாப் முகர்ஜி தலைமையில் சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், ஆனால் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை என்பதால் மீண்டும் கூடி விவாதிப்பது என்று தீர்மானிக்கப்பட்டதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

0 கருத்துகள்: on "சாதிவாரி கணக்கெடுப்பு: முடிவெடுப்பு மீண்டும் தள்ளிவைப்பு"
கருத்துரையிடுக