
இத்தாக்குதலில் எகிப்து நாட்டு எல்லையையொட்டி அமைந்திருந்த பல சுரங்கங்கள் முற்றிலும் சேதமடைந்தன.காஸ்ஸாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதியிலும் இஸ்ரேல் போர் விமானங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தின என்று காஸ்ஸா பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேல் அரசும் உறுதிப்படுத்தியுள்ளது. காஸ்ஸா பகுதியில் உள்ள சுரங்கங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. தாக்குதலில் அழிக்கப்பட்ட சுரங்கங்களை, ஹமாஸ் அமைப்பினர் ஆயுதம், பணம் போன்றவற்றை கடத்துவதற்கு முறைகேடாக பயன்படுத்தி வந்தனர் என இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
0 கருத்துகள்: on "காஸ்ஸா மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல்"
கருத்துரையிடுக