24 ஜூலை, 2010

டயானா கொலை? விபத்தல்ல வழக்கறிஞரின் தகவலால் பெரும் பரபரப்பு

ஜூலை.24:இங்கிலாந்து இளவரசி டயானா திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக முன்னணி வழக்கறிஞர் கூறியுள்ளார்.

டயானாவுடன் பலியான தொழிலதிபர் டோடி பயாதின் குடும்பம் சார்பில் இந்த வழக்கில் வாதிட்ட மைக்கேல் மேன்ஸ்பீல்ட் என்ற முன்னணி வழக்கறிஞர் இந்தக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

டோடி பயாதின் தந்தை முகம்மத் அல் பயாத் ஏற்கனவே இது கொலை தான் என்று நீண்டகாலமாகக் கூறி வருகிறார்.

தனது மகனுடன் இளவரசி காதல் கொண்டதால் அதை பொறுக்க முடியாமல் கொலை செய்துவிட்டதாகக் கூறி வருகிறார் அல் பயாத்.

இந் நிலையில் அவருக்காக இந்த வழக்கில் ஆஜராகி புலனாய்வும் செய்த வழக்கறிஞரும் இவ்வாறு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1997ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி பாரிசில் நடந்த கார் விபத்தில் டயானாவும் பயாதும் பலியாயினர்.

இந்த வழக்கை நடத்திய மைக்கேல் கூறுகையில், இங்கிலாந்து ராஜ குடும்பத்தினர் மீது டயானா சந்தேகத்துடன் தான் வாழ்ந்தார். தன்னை அவர்கள் உளவு பார்ப்பதாக அஞ்சினார்.

இந்த அச்சத்தின் பின்னணியில் தான் இந்த சாவுகள் நடந்தன.இதனால் அவை விபத்தினால் ஏற்பட்ட மரணங்கள் அல்ல, நிச்சயம் கொலைகள் தான்.

உலகையே உலுக்கிய டயானாவின் மரணத்துக்கு, எதிர்பாராத விபத்துதான் காரணம் என்று பாரீஸ் போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்தது, இந்த விவகாரத்தில் மேலும் சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது.

விபத்தின்போது டயானாவின் கார் ஓட்டுநராக இருந்த பால் மீது வலுவான சந்தேகங்கள் எழுந்துள்ளன. விபத்து நடப்பதற்கு சில நாட்களுக்கு முன், பால் தனது வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது பற்றி விசாரணை அறிக்கையில் ஒரு வரி கூட இடம் பெறாதது டயானா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "டயானா கொலை? விபத்தல்ல வழக்கறிஞரின் தகவலால் பெரும் பரபரப்பு"

கருத்துரையிடுக