3 ஜூலை, 2010

தலிபான்களிடம் தோற்றுவரும் அமெரிக்கா

அமெரிக்கா தாலிபான்களுக்கு எதிரான போரில் போராளிகளிடம் மண்டியிட்டு வருகின்றது. கடந்த பத்து ஆண்டுகளாக நடந்துவரும் இந்த ஆக்கிரமிப்பு போர் போராளிகளை தோற்கடிக்கவில்லை. மாறாக பொதுமக்களை கொன்று குவித்து வருவதுதான் இந்த போரில் அமெரிக்கா புரிந்துள்ள சாதனை.

இந்த போரில் அமெரிக்க ஆக்கிரமிப்பு படையால் எதையும் சாதிக்க முடியவில்லை தனது ஆக்கிரமிப்பு பேய்களை தினமும் பலிகொடுக்கும் நிலைக்கு இன்று அமெரிக்கா வந்துள்ளது.

கடந்த பத்து வருடங்களில் 2009 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகள் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளுக்கு அதிகமான இழப்புகளை ஏற்படுத்தி வருகின்றது என்பதுடன் போர் செலவீனமும் அமெரிக்காவால் தாங்க முடியாத அளவு அதிகரித்து வருகின்றது.

இந்த தோல்வியை அமெரிக்க, நேட்டோ இராணுவ தலைமைகள் ஏற்றுகொள்கின்றது. இன்று ஆஃப்கன் போராளிகள் முப்பது நாட்டு ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் போராடிவருகின்றனர் என்பது குறிபிடதக்கது. இச்செய்தியை பற்றி விரிவாகப் பார்க்க இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வீடியோவை பார்வையிடவும்.



Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தலிபான்களிடம் தோற்றுவரும் அமெரிக்கா"

கருத்துரையிடுக