மாவோயிஸ்ட், நக்சல்களின் முக்கியப்புள்ளியும் , பிரபலமானவரும் , மாவோ., நக்சல்கள் அமைப்பின் மத்தியக்குழு உறுப்பினரான அஜத்தை போலீசார் சுட்டுத்தள்ளினர்.
இவர் நக்சல் தலைவர் வலதுகரமாக இருந்தவர். இன்று போலீசாருக்கும், நக்சல்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் ஆந்திர, மஹாராஷ்டிரா மாநில எல்லை பகுதியில் சார்க்பள்ளி கிராமம், அடிலாபாத் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட இருவரில் ஒருவர் செர்க்குரி ராஜ்குமார் என்ற அஜத் ஆவார். இவர் மவோ., நக்சல்கள் மத்தியக்குழு உறுப்பினர். இதோடு இவர் செய்தி தொடர்பாளராகவும் இருந்திருக்கிறார். அஜத் என்று தான் அழைக்கப்படுவார். மாவோ., முக்கிய தலைவர்களில் ஒருவரான முப்பல்லா லஷ்மணராவ் என்பவரின் வலது கரமாக இருந்திருக்கிறார். இவரது தலைக்கு போலீசார் ரூ,. 12 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் போலீசார் அறிவித்திருந்தனர்.
இவரது இழப்பு நக்சல்களுக்கு பெரும் கை முறிவாகவே கருதப்படுகிறது. புலிகளின் செய்தி தொடர்பாளராக இருந்த தமிழ்ச்செல்வன் இறந்த பின்னர் புலிகள் அமைப்பு பெரும் சரிவை சந்தித்தது. இதுபோல மாவோ., வுக்கும் இது ஒரு பெரும் அடியாகவே கருதப்படுகிறது. சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் ஏ.கே., 47 ரக துப்பாக்கியும் போலீசார் கைப்பற்றினர்.
அஜத் கொல்லப்பட்ட தகவல் கிடைத்ததும் மீண்டும் ஒரு பெரும் தாக்குதலை நடத்த தயாராகுமாறு மாவோ.,யிஸ்ட்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதனையடுத்து ஆந்திர ,ஒரிசா, சட்டீஸ்கர், மேற்குவங்கம். மத்தியபிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநில போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
0 கருத்துகள்: on "மாவோயிஸ்ட் நக்சல்கள் அமைப்பின் மத்தியக்குழு உறுப்பினரை போலீசார் சுட்டுத்தள்ளினர்"
கருத்துரையிடுக