12 ஆக., 2010

துபாய்:தொழிற்சாலை தீ விபத்தில் இந்தியர் உள்பட 11 பேர் பலி

துபாய்,ஆக12:துபாயில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர் ஒருவர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். அல்கூஸ் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள வாசனை திரவிய தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.இதில் அந்த தொழிற்சாலைக்குள் தூங்கிக் கொண்டிருந்த 11 பேர் பலியானார்கள். இறந்தவர்களில் ஒருவர் இந்தியர், 9 பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்.

இந்த விபத்து குறித்து துபை காவல் துறை தலைவர் கமீஸ் அல் மஸீனா கூறியது: "தொழிற்சாலைக்குள்ளேயே ஊழியர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த ஆலையின் ஒரு பகுதியை பிரித்து தடுப்பு அமைத்து அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.அடிப்படை வசதிகள் ஏதும் டெய்து கொடுக்கப்படவில்லை.இது சட்ட விரோதம் ஆகும். அதற்காக அந்த நிறுவனத்தின் உரிமையாளர்,நிர்வாக இயக்குநர் மற்றும் நிறுவனத்துடன் தொடர்புடைய 2 இந்தியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த தீ விபத்துக்கு சதித் திட்டம் காரணமாக இருக்காது என்று தெரிகிறது. விபத்துக்கான காரணம் குறித்து தடயவியல் நிபுணர்கள் விசாரணை மற்றும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். விபத்து ஏற்பட்ட அரை மணி நேரத்துக்குள் தீ கட்டுப்படுத்தப்பட்டு விட்டது" என்றார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "துபாய்:தொழிற்சாலை தீ விபத்தில் இந்தியர் உள்பட 11 பேர் பலி"

கருத்துரையிடுக