16 ஆக., 2010

சுதந்திர தின கொண்டாட்டத்தில் உமர் அப்துல்லாஹ் மீது ஷூ வீச்சு

ஸ்ரீநகர்,ஆக16:ஜம்மு கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஹ் மீது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது ஒரு போலீஸ்காரர் ஷூ வீசினார்.

சுதந்திரக் தினக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக மூவர்ண கொடியை ஏற்றி சல்யூட் செய்யும் வேளையில் போலீஸ்காரர் ஷூவை உமர் அப்துல்லாஹ் மீது வீசினார்.ஆனால் உமர் அப்துல்லாஹ் ஷூவின் தாக்குதலிருந்து மயிரிழையில் தலையில் படாமல் தப்பினார்.

அப்துல் ஹத்ஜான் என்ற தலைமைக் காவலர் ஒருவர்தான் முதல்வர் மீது ஷூவை வீசியவர்.இவரை உடனே பாதுகாப்புப் படையினர் கைதுச் செய்தனர்.

மேடையின் பின்பகுதியிலிருந்து ஷூ வீசப்பட்டது. அப்துல் ஹத்ஜான் எழுந்து நின்று கொண்டு 'எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்' என்று கூறியவாறு ஷூவையும், கறுப்புக் கொடியையும் உமர் அப்துல்லாஹ் மீது வீசியெறிந்தார்.

இதுக்குறித்து கருத்துத் தெரிவித்த உமர் அப்துல்லாஹ்;"கல்வீச்சை நிறுத்திவிட்டு கோஷமிடுவதும், காலணியை வீசுவதும் நல்லதுதான்" எனக்கூறினார்.

ஆனால் ஷூவை வீசிய போலீஸ்காரர் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்றும்,கிரிமினல் வழக்கில் கைதுச் செய்யப்பட்டதால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும்,கஷ்மீர் மாநில டி.ஜி.பி குல்தீப் கோடா விளக்கமளித்துள்ளார்.

பந்திப்போரா மாவட்டத்தில் அஜாஸ் பகுதியைச் சார்ந்தவர் ஜான். ஷூ எறிந்ததைக் குறித்து விசாரணை நடைபெறும் என்றும், போலீஸ்காரரை விசாரணைச் செய்துவருவதாகவும் டி.ஜி.பி தெரிவித்துள்ளார்.

ஷூ எறிந்த சம்பவத்தைத் தொடர்ந்து 15 போலீஸ்காரர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "சுதந்திர தின கொண்டாட்டத்தில் உமர் அப்துல்லாஹ் மீது ஷூ வீச்சு"

கருத்துரையிடுக