23 ஆக., 2010

ஒபாமா முழுமையான கிறித்தவர்தான்!: வெள்ளை மாளிகை விளக்கம்

ஆக23:அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஒரு முழுமையான கிறித்தவர் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.அமெரிக்கர்களில் ஐந்தில் ஒருவர் ஒபாமாவை ஒரு இஸ்லாமியர் என்று நினைப்பதாக சமீபத்தைய ஆய்வு ஒன்று தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை,ஒபாமா தவறாமல் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்திச் செயலாளர் பில் பர்ட்டன் நிருபர்களிடம் கூறுகையில்,
"அதிபர் ஒபாமா ஒரு முழுமையான கிறித்தவராவார். அவருடைய அன்றாட கடமைகளில் ஒன்றாக ஆண்டவனை பிரார்த்திப்பதும் உள்ளது" என்றார்.

"ஒபாமா தினமும் பிரார்த்தனையில் ஈடுபடுகிறார். அவருக்கு ஆன்மிக ரீதியில் அறிவுரை கூற கிறித்தவ பாதிரியார்கள் அடங்கிய குழு உண்டு. அவர் ஒரு கிறித்தவர் என்பது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு மட்டும்தான். அதை அவர் பொதுமக்களிடமோ ஊடகங்களிடமோ வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

அமெரிக்க பொருளாதாரத்தை மீட்டெடுத்தல்,ஈராக்கில் இருந்து ராணுவத் துருப்புகளை தாயகத்துக்கு திரும்பச் செய்தல்,அமெரிக்கர்களின் சுகாதாரம் மற்றும் நிதி நிலைமைகளை சீர் செய்வதில் அவருக்கு உதவியாக இருப்பது, அவருடைய கிறித்தவ மத நம்பிக்கை தான். அதற்காக அவர் அதை தோளில் அணிந்துகொண்டு திரிய முடியாது" என்று கூறியுள்ளார் பர்ட்டன்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஒபாமா முழுமையான கிறித்தவர்தான்!: வெள்ளை மாளிகை விளக்கம்"

கருத்துரையிடுக