17 ஆக., 2010

துபாயில் தங்குவதற்கு கட்டணமா? வதந்தி என துபாய் நகரசபை

துபாய்,ஆக17:எமிரேட்ஸில் வசிக்கும் வெளிநாட்டினர் மற்றும் உள்நாட்டு மக்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும், அந்தத்தகவல் வதந்தி எனவும் துபாய் நகரசபை அறிவித்துள்ளது.

1962 ஆம் ஆண்டு முதல் கட்டிடத்திற்கான கட்டணத்தை ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் அல்லாதவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது.

வசிப்பிடத்திற்கான ஒப்பந்தமோ,வணிக உரிமமோ புதுப்பிக்கும் பொழுது துபாய் குடிநீர் மற்றும் மின்சார விநியோகத்திற்கான இண்டிக்ரேட்டட் இ சிஸ்டம் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரக குடிமகன்கள் அல்லாதவர்களிடமிருந்து வருடத்திற்கு வாடகையில் 5 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "துபாயில் தங்குவதற்கு கட்டணமா? வதந்தி என துபாய் நகரசபை"

கருத்துரையிடுக